இடுகைகள்

பரமசாமி ( வழக்கொழிந்த தமிழ்ச்சொல்)

படம்
அம்பறாத்தூணி என்ற வார்த்தை உபயோகம் எனது நெஞ்சத்திற்கு நெருக்கமானதை உணர்ந்தேன். நாஞ்சில் நாடன் ஐயா அவர்கள் 18.03.2022 அன்று "கம்பன் நூல்களை வெளியிடுங்கள்" என்ற ஒரு காணொளியை அனுப்பியிருந்தார். அந்த காணொளியில் யானைக்குத் தமிழில் பல சொற்கள் இருக்கின்றன என்று குறிப்பிட்டு, சில சொற்களையும் குறிப்பிட்டு, இதுவெல்லாம் உபயோகப்படுத்தவில்லையென்றால் அழிந்துவிடும், காலப்போக்கில் யானை என்ற ஒற்றைச் சொல் மட்டுமே தங்கும் என்றும், தமிழனுக்கு அந்த ஒரு சொல் மட்டுமே போதும் என்ற நிலையில் உள்ளதையும் வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார்.  அப்பொழுது குழைக்காதர் பாமாலையிலிருந்து ஆசிரியர் நாராயண தீக்ஷிதர் குறிப்பிட்டிருந்த யானையின் மாற்றுச் சொல்லைப் பாடலுடன் குறிப்பிட்டிருந்தேன். கைம்மா, நால்வாய் என்று ஆழ்வார்கள் குறிப்பிட்டு இருந்ததையும் தெரிவித்து இருந்தேன். அவருக்குத் தெரியாது இல்லை, இருந்தாலும் நான் அறிந்தவற்றைப் பகிர்ந்து இருந்தேன்.  அதே போல் பரம் என்ற கட்டுரையில் பரமசாமி ( The Supreme Being) என்றால் கடவுள் என்ற அர்த்தத்தில் குறிப்பிட்டிருந்தார் ஐயா நாஞ்சில் அவர்கள்.  அப்பொழுது...

கம்பனின் அம்பறாத்தூணி

படம்
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கலைமாமணி நாஞ்சில் நாடன் அவர்களை , அவரது கோயம்புத்தூர் இல்லத்தில் சந்தித்தேன். பேசிக் கொண்டிருந்த கால அளவு (11/2 மணி ) என்பது மிகவும் குறைவு.  அந்த குறைந்த நேரத்தில் கம்பனின் சொல் என்பது தமிழுக்குக் கிடைத்த மாபெரும் கொடை. கம்பன் பிறந்தது என்பது தமிழுக்கும் தமிழகத்துக்கும் பெருமை என்றால் மிகையாகாது. கம்பனின் நாவில் உருவாகிய சொற்கள் என்பது கடவுளின் பூரண அருளினால் மட்டுமே என்றும் பல செய்திகளைத் தந்த வண்ணம் இருந்தார்.  தமிழ்க்கடலை சந்தித்த ஒரு மகிழ்ச்சி எனது மனதில் ஓடியது. அடியேனது சமீபத்திய படைப்பான மூன்று புத்தகங்களை அவரது பார்வைக்குக் கொடுத்தேன். பிரியும் நேரத்தில் அவர் எழுதிய "அம்பறாத்தூணி" "சங்கிலிப்பூதத்தான்" என்ற இரண்டு புத்தகங்களை வழங்கினார்.  அதில் கம்பனின் அம்பறாத்தூணி என்ற புத்தகம் அடியேனை மிகவும் கவர்ந்தது.‌ கடல் வற்றினாலும் வற்றும் ஆனால் இராமனின் கணைப்புட்டிலிருந்து கணைகள் வற்றாது. அதுபோல் கம்பனின் அம்பறாத்தூணியில் சொற்கள் வற்றாது.  அம்பு + அறாத்+ தூணி என்று பெயர் வைத்தது என்பது மிகவும் அழகாகவும் அருமையாகவு...

இராமானுஜ இதிகாசம் (நூல் மதிப்புரை)

படம்
திரு நாகஸ்வாமி  என்ற தொல்லியல் துறை வல்லுநர், இராமானுசரின் வாழ்க்கை சம்பவங்கள் என்பது புனைவு என்றும், பொய் என்றும் சொல்லி அவரது சைவ வெறியைக்  தீர்த்து ஒரு புத்தகம் எழுதியிருந்தார். அதாவது இராமானுசரின் வாழ்க்கை பொய் என்று நிரூபித்து  விட்டால் வைணவத்தை எளிதில் வீழ்த்திவிடலாம் என்ற அற்ப சந்தோஷத்தின் காரணமாக, வெறி உந்தப்பட்டு எழுதிய புத்தகம் “Ramanuja myth and Reality“.  அவர் எடுத்து வைத்த வாதங்களில் முக்கியமாக இரண்டு வாதங்கள் என்பது,  1. இராமானுஜர் சோழ தேசத்திலிருந்து  வெளியேறியது என்பது சோழ அரசனின் துன்புறுத்தல் அல்ல, அப்பொழுது ஆட்சி செய்த குலோத்துங்கன் சமய வெறுப்பு அற்றவன், மேலும் பல கைங்ஙர்யங்களைச்  செய்தவன் என்று கல்வெட்டு மூலம் நிரூபித்து , வைணவர்கள் புனைந்து சோழ அரசின் மீது பழியை வீசுகின்றனர் . ஆதலால் எந்தவொரு கொடுமையும் நடக்கவில்லை , நடக்காத ஒன்றை  பொய் பரப்புகின்றனர். 2. இராமானுஜர் மேலக்கோட்டை சென்று, அங்குள்ள உற்சவ மூர்த்தியை டில்லியிலிருந்து மீட்க வில்லை, ஏனென்றால் மேலக்கோட்டை  மற்றும் தென்னிந்தியா பகு...

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

படம்
ஆண்டாள் நாச்சியார் தனது இரண்டு பிரபந்தங்களிலும் இயற்கையை உணர்ந்து உள்வாங்கி ,  தான் அனுபவத்தில் கொண்டு ,  தனது கவிகளின் மூலம்  உணர்த்திய சிறந்த புலவர். இயற்கை அனுபவங்களைக் கொண்டு இயற்கையையும் படைத்த கண்ணன் பரமாத்மாவை அனுபவிக்க வந்த கவிகள் அவளது "  பிரபந்தங்கள்" என்றால் மிகையாகாது.‌ அவள் திருப்பாவையில் எழுதிய "  கீசு கீசு" என்று பறவைகளின் ஒலி சப்தங்களுடன்  பாடலைத் தொடங்கி , அதில் அந்த ஆனை சாத்தன் என்ற பறவையின் ஒலி சப்தம் இதுதான் என்று பாடலில் பாடியது என்பது, இயற்கையை எந்த அளவுக்கு உணர்ந்து பாடியிருப்பாள் என்று தமிழ் அறிஞர்கள் இன்றும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஆத்திகர்களும் நாத்திகர்களும் ஆண்டாளின் பாடல் வரிகளை எடுத்துக் கொண்டு, இது எந்தப் பறவை , அந்த பறவையின் குணாதிசயங்கள் என்னவென்று இன்றும் ஆலோசித்துக் கொண்டிருக்கின்றனர்கள்.  இன்று அதிகாலை  புள்ளரையன் கோயில்  தெருவில் அடியேன் உணர்ந்தது, ஆண்டாள் அனுபவித்த "புள்ளும் சிலம்பினகாண்" என்ற பாடல் வரிகள்.  அதிகாலை பெரும்பாலும் எழுந்திரு...

அசுரர் அரக்கர் -7 (அவுணன்)

படம்
ஆழ்வார்கள் அவுணன் என்ற சொல்லை பெரும்பாலும் அசுரர்களைக் குறிக்கும் சொல்லாக உபயோகப்படுத்தியுள்ளார்கள்.‌ "கோளரியின் உருவங் கொண்டு அவுணன் உடலம் குருதி குழம்பி எழ கூர் உகிரால்"  "முன் நரசிங்கமது ஆகி அவுணன் முக்கியத்தை முடிப்பான்"                      - பெரியாழ்வார்  "பரியன் ஆகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு  அரிய ஆதிப்பிரான்"                 - திருப்பாணாழ்வார்  "அம் கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆள் அரி ஆய் அவுணன் பொங்க ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதன் இடம்"            - திருமங்கையாழ்வார் "அந்திப்போது அவுணன் உடல் இடந்தானே" "புக்க அரி உரு ஆய் அவுணன் உடல் கீண்டு உகந்த சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன"  "செம் பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டவன்"                             - நம்மாழ்வார்  மேற்கூறிய பாசுரங்களில் அவுணன் என்பது ஹிரண்யகசிபுவைக்...

அசுரர் அரக்கர் - 6 (இராக்கதர் தானவர்)

படம்
அசுரர் அரக்கர் பற்றி நூல்களிலிருந்து தேடும்போது அதற்கு ஈடான வார்த்தைகளை ஆழ்வார்களும் கம்பரும் உபயோகப்படுத்தியுள்ளது என்பது தெரியவந்தது.‌ இராக்கதர் ஆழ்வார்களும் கம்பனும் அரக்கன் என்ற சொல்லுக்கு இராக்கதர் என்ற சொல்லையும் பயன்படுத்தியுள்ளனர்கள். " இராக்கதர் வாழ் இலங்கை பாழாளாக படை பொருதானுக்கு"                         - பெரியாழ்வார்  அரக்கர்கள் வாழும் இலங்கை என்பது ஆழ்வார் பாடல். "அண்டக் குலத்துக்கு அதிபதி ஆகி அசுரர் இராக்கதரை இண்டக் குலத்தை எடுத்துக் களைந்த இருடிகேசன்"                         - பெரியாழ்வார்  அசுரர் அரக்கர் குலத்தை களைந்த இருடிகேசன் என்ற எம்பெருமான் என்பது ஆழ்வார் பாடல் "முன நாள் வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து மலைபோல் உருவத்து ஓர் இராக்கதி மூக்கு அரிந்திட்டவன் காண்மின்"            - திருமங்கையாழ்வார்  சூர்ப்பணகை என்ற அரக்கி மூக்கை அரிந்திட்ட வரலாற்றைக் கூறும் ஆழ்வார் பாடல்.‌ கம்பராமாயணத்தி...

அசுரர் அரக்கர் கட்டுரையின் நோக்கம்

ஐந்தாவது பாகம் இரண்டு நாட்களுக்கு முன் வெளியிட்டோம். இதைப் பார்த்து எனது நண்பர்கள், ஐந்து பாகமாகக் கட்டுரை ஒரு ஆய்வுக்கான நோக்கம் போல்  கொண்டிருக்கிறது. அதன் காரணம் என்னவோ ? என்று வினவி இருந்தார்கள்.  இதே கேள்வி சில வாசகர்களிடம் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதனால், பதிலை எல்லோரிடமும் பகரும் விதத்தில் எழுதும் கட்டுரை.  அரக்கர் அசுரர் வார்த்தைகள் தமிழில் ஒரே அர்த்தத்தைக் குறிக்கும் வண்ணம் உபயோகப் படுத்தப்படுகிறது. பலரிடம் உரையாடும் போது ஒரே வார்த்தை என்பதனால் அரக்கர் இடத்தில் அசுரர் என்றும் , அசுரர் இடத்தில் அரக்கர் என்றும் உபயோகப் படுத்தலாம் , அதில் தவறு இல்லை என்று கூறுவதைக் கவனித்தேன்.  ஐந்து அல்லது ஆறு வருடத்திற்கு முன் திருப்பாவை "புள்ளின் வாய் " பாசுர அனுபவமாக ஒரு கட்டுரை வெளியிட்டேன். "பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானை" என்பது  இராவணனை அழித்த ராமனைக் கொண்டாடுகிறார்கள் என்பது வ்யாக்னம். அந்த பாடல் கிருஷ்ண ராம அவதாரத்தைக் கொண்டாடும் பாசுரம்.  அடியேன் கிள்ளி என்ற சப்தம் நகத்தினால் செய்யப்படும் காரியம் என்று கருதி , நரசிம்ம அவதாரத்துடன் ஒப்பிட...

அசுரர் அரக்கர் - 5

படம்
அரக்கர் என்பவர்கள் யார் என்றும் அசுரர் என்பவர்கள் யார் என்றும், ஆழ்வார்கள் கம்பன் நூல்களிலிருந்துப் பார்த்தோம்.  அரக்கர் அசுரர் இருவருக்கும் சில ஒற்றுமைகள் இருந்தன என்பதனை ஆழ்வார்கள் கம்பன் பாசுரங்கள் மூலம் அறிகிறோம்.  வலிமை மற்றும் கூர்மையான பற்கள் கொண்ட முக அமைப்பு  "வல்லாளன் தோளும் வாள் அரக்கன் முடியும் தங்கை பொல்லாத மூக்கும் போக்குவித்தான் பொருந்தும் மலை"   - பெரியாழ்வார் திருமொழி "மின் நிறத்து எயிற்று அரக்கன் வீழ வெஞ்சரம் துரந்து பின்னவற்கு அருள் புரிந்து அரசு-அளித்த பெற்றியோய்"                  - திருசந்த விருத்தம் "இலங்கை-தன்னுள் பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம் பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான்"                  - பெரிய திருமொழி "மின் இலங்கு அணி எயிற்று அரக்கர் குல வீரனாகிய விபீடணன்"                        - வில்லி பாரதம்  அரக்கர் என்பவர்கள் வலிமையானவர்கள் (வல்லாளன்), உயர்ந்த கூர்மையான ப...

அசுரர் அரக்கர் - 4

படம்
அசுரர்கள் என்பவர்கள் காஷ்யப ரிஷி திதி தம்பதியினருக்குப் பிறந்த குழந்தைகள். இதைத் தெளிவாகக் கம்ப இராமாயணத்தில் ஆரண்ய காண்டத்தில் சடாயுகாண் படலத்தில் கவிச்சக்கரவர்த்தி கம்பன் வர்ணிக்கிறார்.     உலக உயிர்களின் தோற்ற வரலாறு என்று 5 பாடல்களில் கம்பன் , தக்கன் மகள்கள் பதின்மூவர் காஷ்யப ரிஷியை மணந்து , உயிர்கள் உருவாகுவதை விளக்குகிறார்.  "தக்கன் மனை வயிற்று உதித்தார் ஐம்பதின்மர் தடங் கொங்கைத் தையலாருள் தொக்க பதின்மூவரை அக்காசிபனும் புணர்ந்தனன்; அத் தோகைமாருள் மிக்க அதிதிப் பெயராள், முப்பத்து முக்கோடி விண்ணோர் ஈந்தாள் ; மைக் கருங் கண் திதி என்பாள், அதின் இரட்டி அசுரர்தமை வயிறு வாய்த்தாள் " (2805) அதிதி மூலமாகப் பிறந்தவர்கள் விண்ணோர் கள் என்றும் , தேவர்கள் என்றும், அமரர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். முப்பத்து முக்கோடி தேவர்கள் என்று சொல்லப்படுகிறது.  ஆண்டாள் திருப்பாவையில் " முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்" என்று முப்பத்து முக்கோடி தேவர்களை அமரர்கள் என்று அழைக்கிறாள்.  திருமால் வாமன அவதார...

பாமாலை (மூலம்)

முன்னுரை வயதில் மூத்த திருப்பேரை மக்கள் மனப்பாடம் செய்த பாமாலைக்கும், அச்சில் வெளிவந்த பாமாலை  மூலத்துக்கும் சில பாடபேதங்கள் இருப்பதை ஊர் பெரியவர்கள் மூலம் அறிந்தோம்.  நமது  பேராபுரி மஹாத்ம்யம் புத்தகம் வெளிக்கொணரும் போது அந்த பிழையை நிவர்த்தி செய்யும் வகையில் உண்மையான மூலத்தைத் தேடி அழைந்தோம். அந்த மூலமானது சீர்பிரிக்காமல் நான்கு அடிகளாக இருந்தது. அந்த மூலத்தை அப்படியே பேராபுரி மஹாத்ம்யம் நூலில் கொடுத்தோம். ஆனால் அது படிப்பதற்குக் கஷ்டமாக இருப்பதை உணர்ந்தோம்,இருந்தாலும் ஒரு மூல நூல் உருவாகிய வண்ணம் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அப்படியே வெளியிட்டோம். பிறகு உ.வே.சா நூலகம் மூலம்  ஸ்ரீ உ.வே.சா. அவர்களால் சீர் பிரித்து 1939ம் ஆண்டு வெளிவந்த மகரநெடுங்குழைக்காதர் பாமாலை நூலை, மீண்டும் 2021 ம் ஆண்டு மூன்றாவது பதிப்பாக அடியேனது நிதியுதவி மூலம் வெளிக்கொணர்ந்தோம். அதுவும் படிப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது என்று சொல்லியதன் காரணத்தினால் , "தமிழ் வளர்த்த ஆழ்வார்கள் வழியில் தமிழ்ப்பேரை தீக்ஷிதர்" என்ற பாமலைக்கு நெடிய உரையுடன் கூடிய ஒரு நூலை அடியேன் வெளியிடும்போது , எளிய முறையில் இன...