இடுகைகள்

ஜூலை, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாரம் (கிழமையில் தொகுப்பு)

படம்
உரிமை என்றால் ஒருவனுக்குச் சட்டப்படி உரித்தான ஒன்றை உறுதிப்படுத்தி, அதன்மேல் சுதந்திரமாக எப்பொழுது வேண்டுமானாலும் அவனது/ அவளது விருப்பத்திற்கேற்ப பயன்படுத்தும் ஒரு விதமான செயலுக்கான வார்த்தை. ஒரு சொத்தின் மேல் உரிமை கொண்டாடுவது என்பது சட்டப்படி எனது உரிமை என்று சொல்லாடல் உபயோகப்படுத்துகிறோம். இந்த உரிமை என்பது சட்டத்தினால் மாற்றப்படும் உரிமை. இதில் சில உரிமைகள் என்பது இயற்கை விதியின் படி நிகழும். அதை மாற்ற முடியாது. தாய் தந்தை உறவு உரிமை என்பது இயற்கையால் / இறைவனால் கொடுக்கப்பட்ட உரிமை. இந்த உடம்பின் மூலம் உயிர் அறியப்படும் வரை அந்த உரிமைத் தொடரும். தந்தை மற்றும் தாய் என்பவர்கள் மகன் மகளுக்கான சொத்து, மகன் மற்றும் மகள் என்பவர்கள் தாய்க்கான தந்தைக்கான சொத்து. இதிலிருந்து ஒன்று தெரிகிறது உரிமை என்பதற்குச் சொத்து என்றும் புரிகிறது. அதுவும் உண்மைதான். உரிமை என்பது உரி என்ற வேர்ச்சொல்லிருந்து வருகிறது. உரித்தான பொருளின் மீது ஆதிக்கம் அல்லது அன்பு செலுத்துவதை உரிமை என்று பொருள் கொள்ளலாம். கிழமையின் தொகுப்பு வாரம் . இதுவும் உரிமை என்பதனை உணர்த்துவதை நமது இலக்கியங்கள் மூலம் அறிவோம்...

உணர்வு

படம்
                                              உணர்வு என்பது தனிமனித அனுபவம். உணர்வு என்பது இன்பம் மற்றும் துன்பம் இரண்டையும் ஒருவனுக்கு வெளிப்படுத்தும். இதில் சிலவற்றை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியும். சிலவற்றை முடியாது. அக உணர்வு , புற உணர்வு என்று தமிழ் இலக்கியம் இதனைக் கூறுகிறது. இன்ப துன்பம் எப்படி ஏற்படுகிறது என்றால் , ஒருவனது வாழ்நாள் முழுவதும், உயிர் உடம்புடன் இருக்கும் வரை இஃது இவ்வாறு நடைபெறுகிறது என்று திருக்குறளுக்கு உரை எழுதும்போது பரிமேலழகர் காண்கிறார். "வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடக்குங் கல்" வாழ்நாள் வழியடைக்கும் கல் என்பதற்கு , ஐவகைக் குற்றத்தால் வரும் இருவகை வினையும், அதன்வழி வரும் இன்பம் துன்பம் என்ற வினைப்பயனும், உயிர் உயிரோடு இருக்கும் வரை வரும், இதை வாழ்நாள் முழுதும் என்று கூறுகிறார். அவித்தை (அறியாமை), அகங்காரம், அவா, விருப்பு, வெறுப்பு என்று ஐந்தினையும் , ஐங்குற்றம் என்று பரிமேலழகர் காட்டுகிறார். இதை விடுத்து அறன் வழியில் செ...