ஞானம்
பாரதீய மரபில் ஞானம் என்றால் என்ன? நாம் இன்று படிப்பது எல்லாம் ஞானமா? ஒரு விஷயத்தை அறிவது என்பதும் ஞானமா? அதை அலசி ஆராய்ந்து புள்ளி விவரங்களுடன் அறிவது , அறிந்தவற்றைச் சொல்வது என்பது ஞானமா? இது மட்டுமல்ல பாரதீய மரபில் முக்கியமானது புருஷார்த்தம் என்ற கொள்கை. புருஷார்த்தம் என்பது வீடு பேறு அடைவதற்கான வழி முறை. அதாவது மோஷத்திற்கான வழிமுறை. பிறப்பற்ற ஒரு சூழ்நிலையை அடைவதற்கான வழி என்பதனை வீடுபேறு என்று அறிகிறோம். புருஷார்த்தம் என்றால் தர்ம அர்த்த காம மோக்ஷ என்பதுதான். இதனைத் தமிழில் அறம் பொருள் இன்பம் வீடு என்று அழகாகக் காட்டுவார்கள். அறத்தின் வழியில் பொருளை ஈட்டி இன்பத்தை அனுபவித்தல் என்ற இவ்வுலக வாழ்க்கு ( இம்மையில் செய்யும் காரியங்கள்) , மறுமையில் வீட்டின்பம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை அறம் பொருள் இன்பம் என்று இம்மையில் செய்யப்படும் செயல் மூன்றையும் மூன்று பாற்களாக அமைத்து , அதில் ஒழுகும் போது மறுமையில் வீடுபேறு கிடைக்கும் என்ற நம்பிக்கையை நம்பிக்கையாகவே நம்மிடம் விட்டுச் சென்றுள்ளார். இதுதான் திருக்குறளுக்குச் சிறந்த உரை எழுதிய பரிமே...