இடுகைகள்

அக்டோபர், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அதி நுகர்வு (ம) பிராச்சார உத்தி

படம்
நுகர்வது என்பது பழக்கம் சார்ந்த ஒரு குணம். நுகர்வது என்பது எல்லோருக்கும் இருக்க வேண்டும். நுகர்வு திறன் என்பது இறைவன் கொடுத்த வரம்.  நாம் சக்தியைப் பெறுவதற்கு உணவை நுகர வேண்டும். உணவைத் தயாரிக்கத் தேவையான பொருட்களைச் சந்தையிலிருந்து நுகர வேண்டும். அறிவை வளர்ப்பதற்குப் புத்தகம் வாசிப்பை நுகர வேண்டும். நுகர்வு என்பது நமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திச் செய்யப் பயன்படக்கூடிய பொருட்கள் மற்றும் சேவை.  காமம் என்பதுகூட நுகர்வு தான். காமம் இல்லையென்றால் உலகில் இனவிருத்தி என்பது முழுவதுமாக நடைபெறாது உலகம் இயக்கம் நின்றுவிடும்.  வருமானத்திற்கும் நுகர்வுக் கும் நேரடி தொடர்பு உண்டு. பொருட்கள் / சேவைகள் அனைத்தும் சந்தையில் வருவதற்குக் காரணம் நுகர்வுதான். நுகர்வு சார்பு பொருளாதாரம் என்பது பொருளியல் கோட்பாடு. மனிதனுடைய ஆசைக்கும் நுகர்வுக்கும் தொடர்பு உள்ளது. ஆசையைக் குறைப்பதன் மூலம் நுகர்வையும் குறைக்கலாம். சாப்பிடும்போது சிலர் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டு (நுகர்ந்து) விட்டு பெரிய கஷ்டங்களை அனுபவிப்பார்கள். இதனை நாம் கண்கூடப் பார்க்கலாம். இதைத்தான் அதிநுகர்வு அல்லது கட்டற்...