நேரா யோசி
எனது நண்பர் சுதாகர் கஸ்தூரி எழுதிய நேரா யோசி என்ற புத்தகத்தை வாசித்து முடித்தபின், இந்தப் புத்தகம் குறிப்பாக இளைஞர்களுக்கும் , ஏன் எல்லோருக்கும் நேரா யோசிப்பதற்குத் தடையாக இருக்கும் தடைகளை "எதிரி" என்று பட்டியலிட்டு அவருக்கே உரித்தான நடையில் சில புனைவுகளைப் புகுத்தி, அந்தத் துறையின் சிறந்த ஆய்வாளர்களின் புத்தகத்தைச் சுட்டிக்காட்டி, அந்தப் புத்தகத்தில் கூறப்பட்ட சில முக்கியமான வார்த்தைகளைக் கொண்டு எதிரிகளை அறிவதையும் , அதனை வெல்வதற்கான செயல் திட்டங்களையும் நேர்த்தியாக ஆசிரியர் எடுத்து வைத்துள்ளார். இந்தப் புத்தகத்தில் 24 எதிரிகள் நேரா யோசிப்பதற்குத் தடையாகப் பட்டியிலிட்டுள்ளார். இது அனைத்தும் நாம் அறிந்தவைகளாக இருக்கலாம். ஆனால் அவர் எடுத்துக் கையாண்ட நேர்த்தி என்பது பிரமிக்க வைக்கிறது. சிறந்த ஆய்வாளர்களின் கருத்து மற்றும் உடல் உறுப்புகள் மற்றும் சுரப்பிகள் மூலம் நிகழும் சில மனமாற்றங்களையும் சேர்த்து விளக்குவது என்பது அவரது விஞ்ஞான அறிவின் வீச்சையும், வாசிப்புத் திறமையையும் ஒருங்கிணைத்து இங்கே நாம் பார்க்க முடிகிறது. எதிரி 1- புகார் புகார் கூறுவதால் தன் திறமைகளை வளர...