இடுகைகள்

செப்டம்பர், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நெஞ்சிலோர் நண்டு

படம்
* ஆண்களுக்கான மார்பக நோய் விழிப்புணர்வு புத்தகம்* எனது நண்பர் சுதாகர் கஸ்தூரி எழுதிய நெஞ்சிலோர் நண்டு என்ற புத்தகத்தை, எனது பணி ஓய்வுக்குப் பிறகு படித்த முதல் புத்தகம். ஒரு தடவை "When bad things happen to good people" Harold S kushner எழுதிய புத்தகத்தையும் , "Man's Search for Meaning" Dr Viktor E Frankl எழுதிய புத்தகத்தையும் படித்து ஒப்பீடு செய்து இரண்டாவது புத்தகம் நடைமுறையை அனுபவத்தின் மூலம் உணர்ந்து வெளிபடுத்திய புத்தகம் என்பதனால் நன்றாக இருக்கிறது என்று எழுதியிருந்தேன். அதற்குச் சுதாகர் கஸ்தூரி அவர்கள் தான் அனுபவித்த அனுபவத்தின் வேதனையின் வெளிப்பாடு என்பதனால் , அதுவே நடைமுறைக்கு உகந்த உணர்வுகளை வெளிபடுத்தும் புத்தகமாக இருக்கும் என்று எழுதியிருந்தார். Emotional Intelligence வகுப்பில் Viktor E Frankel எழுதிய இந்தப் புத்தகமும் அவரது உணர்வு பூர்வமான தத்துவ வார்த்தைகளும் இடம் பெறும். அவரே பிற்காலத்தில் லோகதெரபி என்ற மருத்துவச் சிகிச்சையை உலகுக்கு வழங்கியவர். இப்பொழுது அவர் எழுதிய இந்தப் புத்தகம் என்பது அவர் சந்தித்த யாருக்கும் நிகழக்கூடாத ஒரு சம்பவம் ...

"ஆலிலையில் ஆற்றல்"

படம்
  ஒரு சிறுவன் ஆலிலைக் கண்ணன் படத்தைப் பார்த்து, எவ்வளவு அழகாக ஆலிலையில் சயனித்து, ஒரு காலை தூக்கி அதன் கட்டைவிரலை வாயில் வைத்து சுவைத்துக் கொண்டிருக்கிறான். இதன் அர்த்தம் என்ன? என்று கேட்க அனைவரும் வியந்து நின்றனர். இந்தச் சிறுவனின் கேள்விக்குப்பின் பெரிய தத்துவம் ஒன்று உள்ளது, அந்தத் தத்துவத்தின் குறியீட்டாகவே இந்த ஆலிலைக் கண்ணன் உள்ளான் என்றும் , அவற்றை நாம் ஆழ்வார்கள் பாசுரங்களின் மூலம் நவீன அறிவியியின் துணைக்கொண்டும் ஒரளவு அறியமுற்படுவோம். பேதை குழவி பிடித்துச் சுவைத்துண்ணும் பாத கமலங்கள் வந்து காணீரே! பவள வாயீர் வந்து காணீரே!! என்று பெரியாழ்வார் ஆலிலைக் கண்ணனின் அழகை இந்தச் சிறுவன் போல் ரசித்துள்ளார் என்றும் தெரிகிறது. ஆழ்வார்கள் ஆலிலைக் கண்ணனைப் பல பாடல்களில் பாடியுள்ளார்கள். அவற்றில் சிலவற்றை இப்பொழுது காண்போம் திருப்பாணாழ்வார் “ ஆலமாமரத்தின் இலைமேல் ஒருபாலகனாய், ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்தரவின் அணையான்” என்றும், பெரியாழ்வார் “ ஐய நாவழித்தாளுக்கு அங்காந்திட, வையம் ஏழு கண்டாள் பிள்ளை வாயுளே “ என்றும், “உண்டிட்டு உலகினையேழும் ஒராலிலையில் துயில் கொண்டான்” என்றும், ...