அதி நுகர்வு (ம) பிரச்சார விளைவு
பழக்கம் என்பது எப்படி உருவாகிறது. பின் அதன் சுழற்சி நம்மை அறியாமலே அதற்குள் அழைத்துச் சென்று நமது நேரம் உடல் ஆரோக்கியத்தைச் சிதைக்கும் என்று அறிந்தோம். பணச் சுழற்சி சந்தையில் ஏற்படும்போது பொருளாதாரம் மேம்படும் என்பதும் , இல்லையேல் மந்த நிலை உருவாகும் என்பதும் அறிந்த ஒன்று. பொருளாதாரம் வளரும்போது தனிநபர் வருமானமும் வளர்கிறது. அதற்கேற்ப சந்தையில் பொருட்கள் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தனிநபர் வருமானம் அதிகரிப்பு என்பது நுகர்வு பொருளாதாரத்தை நோக்கி நகர்த்தும் என்பதும் பொருளாதார அடிப்படையில் ஒன்று. இதில்தான் நாம் கவனமாக இருக்க வேண்டும். அனாடமி ஆஃப் கன்சுமிரிசம் என்ற புத்தகம், அமெரிக்காவில் இந்த நுகர்வு தன்மை நகர்ந்துள்ளது என்பதனை விளக்குகிறது. அதற்கு நுகர்வின் உடற்கூறியல் யாவன என்று இந்தப் புத்தகத்தில் விளக்கியுள்ளார் ஆசிரியர் ராம்ஹோர்மோஷி. அதில் ஒரு ஆச்சரியம் உலக மக்கள் தொகையில் 5% இருக்கும் அமெரிக்கா 30% பொருட்களை வாங்குகிறது (Purchasing Power). இந்த வாங்கும் திறன் என்ற கானல் நீர் தோற்றத்தை வைத்துப் பொருளாதாரம் வளர்கிறது என்ற ஒரு பொருளாதார அடிப்படையை உருவாக்கினார்கள். உலகப்போர...