இடுகைகள்

கோண்

படம்
கோண் என்பதற்குக் கோணுதல், வளைவு, மாறுபாடு, கொடுங்கோன்மை, கோணம், நுண்ணிய பகுதி, பாத்திரத்தின் மூக்கு‌ என்று பல அர்த்தங்கள் தமிழ் அகராதியில் உள்ளது.‌ அம்பறாத்தூணி புத்தகத்தைப் படிக்கும்போது, இந்த சொல்லைக் கம்பன் பயன்படுத்திய இடத்தைச் சொல்லி இது ஒரு விஞ்ஞான சொல்லாக இருப்பதை ஆச்சரியத்துடன் ஆசிரியர் நாஞ்சில் நாடன் அவர்கள் பதிவிடுகிறார். அது நமக்கும் மிகவும் ஆச்சரியத்தைத் தந்தது.  யுத்த காண்டம் இரணியன் வதைப் படலத்தில் ,  “‘சாணினும் உளன்; ஓர் தன்மை  அணுவினைச் சதகூறு இட்ட கோணினும் உளன்; மாமேருக் குன்றினும் உளன்; இந் நின்ற தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்; இத்தன்மை காணுதி விரைவின் என்றான்; நன்று எனக் கனகன் சொன்னான்"  எம்பெருமான் எங்குளன் என்று இரணியன் கேட்க , பக்த பிரகலாதன் பதில் கூறும் பாடலாக அமைந்துள்ளது. நன்று என்று கனகன் (இரணியன்) சொன்னான் என்று பாடல் இறுதியில் உள்ளது.  சாணிலும் - சாண் என்ற அளவிலும் உளன். மாமேரு குன்றிலும் உளன். இங்குள்ள தூணிலும் உளன். நீ சொன்ன சொல்லினும் உளன் என்று கூறும் போது,  "ஓர் தன்மை அணுவினைச் சதகூறு இட்ட கோணினும் உளன...

பிள்ளை

படம்
ஹிந்தி மொழியில் ஒரு படம் பார்த்தேன். பிறவியில் கண் தெரியாத குழந்தை , தந்தை மிகவும் வருத்தத்துடன் உயிருடன் புதைக்கச்செல்லத் தாய் தடுத்து நிற்க, அந்த குழந்தை சமுதாய பிரச்சினைக்கிடையில் வளர, கூர்மையான அறிவின் பயனால் எல்லாவற்றிலும் முதலாகத் தேர்ச்சி பெற, தேர்ச்சி பெற்றும் அவன் நினைத்த விஞ்ஞானத் துறையில் +2 படிக்கத் தடை. காரணம் பார்வையில்லை. நீதிமன்றம் மூலம் வாதிட்டு பார்வை இல்லாதவர்களும் விஞ்ஞானத் துறையில் படிக்கலாம் என்ற சூழ்நிலையை மாற்றி, +2 முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்று பொறியியல் கல்லூரியில் அதே பார்வை இல்லாத காரணத்தினால் சேரத் தடை. அமெரிக்கா MIT கல்லூரியில் இடம் கிடைக்க, விமானத்தில் தனியாகச் செல்ல தடை. அந்த தடையையும் வெற்றி கொண்டு அங்குச் சென்று படித்து முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்று வருகிறான்.  மீண்டும் இந்தியாவிற்கு வந்து பார்வை இல்லாத மனிதர்களை வைத்து , உதவாத பொருட்கள் என்ற குப்பைகளைக் கொண்டு ஒரு தொழிற்சாலை அமைத்து , அதை இந்தியாவில் முதன்மைத் தொழிற்சாலையாக மாற்றி வெற்றி சிகரத்தைத் தொடும் காட்சி. இதில் அவன் செய்த உபகாரம் என்பது மாற்றுத்திறனாளி என்று ஒதுக்கப்பட...

அன்பு அறத்தின் அடித்தளம்

படம்
தமிழ் மரபில் அறத்தின் சின்னமாக, தர்மத்தின் சின்னமாகச் செங்கோல், வெண்குடை பார்க்கப்படுகிறது . செங்கோல் , துலாக்கோல், கோல் என்று தமிழ் நூல்களில் காணப்படுகிறது.  "செங்கோலுடைய திருவரங்க செல்வனார்" என்று ஆண்டாள் பாடியுள்ளாள். இன்றும் திருவரங்கநாதன் செங்கோலுடன்தான் புறப்பாடு கண்டருளிகிறார்.   வள்ளுவ பெருந்தகை செங்கோன்மை என்ற அதிகாரத்தில்  "வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்  கோல்நோக்கி வாழும் குடி"  குடி மன்னவன் கோல் நோக்கி வாழும்- குடிகள் அரசன் செங்கோல் உளதாயின் உளவாகா நிற்கும். - பரிமேலழகர் உரை "அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்    நின்றது மன்னவன் கோல்" அந்தணர்க்கு உரித்தாய வேகத்திற்கும் அதனால் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலை பெற்றது அரசனால் செலுத்தபடுகின்ற செங்கோல் - பரிமேலழகர் உரை. கொடுங்கோன்மை அதிகாரத்தில்,  "மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்  மன்னாவாம் மன்னர்க் கொளி" மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை - அரசர்க்குப் புகழ்கள் தாம் நிலைபெறுதல் செங்கோன்மையான் ஆம்; அஃது இன்றேல் மன்னர்க்கு ஒளி மன்னாவாம் - அச்ச...

பரமசாமி ( வழக்கொழிந்த தமிழ்ச்சொல்)

படம்
அம்பறாத்தூணி என்ற வார்த்தை உபயோகம் எனது நெஞ்சத்திற்கு நெருக்கமானதை உணர்ந்தேன். நாஞ்சில் நாடன் ஐயா அவர்கள் 18.03.2022 அன்று "கம்பன் நூல்களை வெளியிடுங்கள்" என்ற ஒரு காணொளியை அனுப்பியிருந்தார். அந்த காணொளியில் யானைக்குத் தமிழில் பல சொற்கள் இருக்கின்றன என்று குறிப்பிட்டு, சில சொற்களையும் குறிப்பிட்டு, இதுவெல்லாம் உபயோகப்படுத்தவில்லையென்றால் அழிந்துவிடும், காலப்போக்கில் யானை என்ற ஒற்றைச் சொல் மட்டுமே தங்கும் என்றும், தமிழனுக்கு அந்த ஒரு சொல் மட்டுமே போதும் என்ற நிலையில் உள்ளதையும் வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார்.  அப்பொழுது குழைக்காதர் பாமாலையிலிருந்து ஆசிரியர் நாராயண தீக்ஷிதர் குறிப்பிட்டிருந்த யானையின் மாற்றுச் சொல்லைப் பாடலுடன் குறிப்பிட்டிருந்தேன். கைம்மா, நால்வாய் என்று ஆழ்வார்கள் குறிப்பிட்டு இருந்ததையும் தெரிவித்து இருந்தேன். அவருக்குத் தெரியாது இல்லை, இருந்தாலும் நான் அறிந்தவற்றைப் பகிர்ந்து இருந்தேன்.  அதே போல் பரம் என்ற கட்டுரையில் பரமசாமி ( The Supreme Being) என்றால் கடவுள் என்ற அர்த்தத்தில் குறிப்பிட்டிருந்தார் ஐயா நாஞ்சில் அவர்கள்.  அப்பொழுது...

கம்பனின் அம்பறாத்தூணி

படம்
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கலைமாமணி நாஞ்சில் நாடன் அவர்களை , அவரது கோயம்புத்தூர் இல்லத்தில் சந்தித்தேன். பேசிக் கொண்டிருந்த கால அளவு (11/2 மணி ) என்பது மிகவும் குறைவு.  அந்த குறைந்த நேரத்தில் கம்பனின் சொல் என்பது தமிழுக்குக் கிடைத்த மாபெரும் கொடை. கம்பன் பிறந்தது என்பது தமிழுக்கும் தமிழகத்துக்கும் பெருமை என்றால் மிகையாகாது. கம்பனின் நாவில் உருவாகிய சொற்கள் என்பது கடவுளின் பூரண அருளினால் மட்டுமே என்றும் பல செய்திகளைத் தந்த வண்ணம் இருந்தார்.  தமிழ்க்கடலை சந்தித்த ஒரு மகிழ்ச்சி எனது மனதில் ஓடியது. அடியேனது சமீபத்திய படைப்பான மூன்று புத்தகங்களை அவரது பார்வைக்குக் கொடுத்தேன். பிரியும் நேரத்தில் அவர் எழுதிய "அம்பறாத்தூணி" "சங்கிலிப்பூதத்தான்" என்ற இரண்டு புத்தகங்களை வழங்கினார்.  அதில் கம்பனின் அம்பறாத்தூணி என்ற புத்தகம் அடியேனை மிகவும் கவர்ந்தது.‌ கடல் வற்றினாலும் வற்றும் ஆனால் இராமனின் கணைப்புட்டிலிருந்து கணைகள் வற்றாது. அதுபோல் கம்பனின் அம்பறாத்தூணியில் சொற்கள் வற்றாது.  அம்பு + அறாத்+ தூணி என்று பெயர் வைத்தது என்பது மிகவும் அழகாகவும் அருமையாகவு...

இராமானுஜ இதிகாசம் (நூல் மதிப்புரை)

படம்
திரு நாகஸ்வாமி  என்ற தொல்லியல் துறை வல்லுநர், இராமானுசரின் வாழ்க்கை சம்பவங்கள் என்பது புனைவு என்றும், பொய் என்றும் சொல்லி அவரது சைவ வெறியைக்  தீர்த்து ஒரு புத்தகம் எழுதியிருந்தார். அதாவது இராமானுசரின் வாழ்க்கை பொய் என்று நிரூபித்து  விட்டால் வைணவத்தை எளிதில் வீழ்த்திவிடலாம் என்ற அற்ப சந்தோஷத்தின் காரணமாக, வெறி உந்தப்பட்டு எழுதிய புத்தகம் “Ramanuja myth and Reality“.  அவர் எடுத்து வைத்த வாதங்களில் முக்கியமாக இரண்டு வாதங்கள் என்பது,  1. இராமானுஜர் சோழ தேசத்திலிருந்து  வெளியேறியது என்பது சோழ அரசனின் துன்புறுத்தல் அல்ல, அப்பொழுது ஆட்சி செய்த குலோத்துங்கன் சமய வெறுப்பு அற்றவன், மேலும் பல கைங்ஙர்யங்களைச்  செய்தவன் என்று கல்வெட்டு மூலம் நிரூபித்து , வைணவர்கள் புனைந்து சோழ அரசின் மீது பழியை வீசுகின்றனர் . ஆதலால் எந்தவொரு கொடுமையும் நடக்கவில்லை , நடக்காத ஒன்றை  பொய் பரப்புகின்றனர். 2. இராமானுஜர் மேலக்கோட்டை சென்று, அங்குள்ள உற்சவ மூர்த்தியை டில்லியிலிருந்து மீட்க வில்லை, ஏனென்றால் மேலக்கோட்டை  மற்றும் தென்னிந்தியா பகு...

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

படம்
ஆண்டாள் நாச்சியார் தனது இரண்டு பிரபந்தங்களிலும் இயற்கையை உணர்ந்து உள்வாங்கி ,  தான் அனுபவத்தில் கொண்டு ,  தனது கவிகளின் மூலம்  உணர்த்திய சிறந்த புலவர். இயற்கை அனுபவங்களைக் கொண்டு இயற்கையையும் படைத்த கண்ணன் பரமாத்மாவை அனுபவிக்க வந்த கவிகள் அவளது "  பிரபந்தங்கள்" என்றால் மிகையாகாது.‌ அவள் திருப்பாவையில் எழுதிய "  கீசு கீசு" என்று பறவைகளின் ஒலி சப்தங்களுடன்  பாடலைத் தொடங்கி , அதில் அந்த ஆனை சாத்தன் என்ற பறவையின் ஒலி சப்தம் இதுதான் என்று பாடலில் பாடியது என்பது, இயற்கையை எந்த அளவுக்கு உணர்ந்து பாடியிருப்பாள் என்று தமிழ் அறிஞர்கள் இன்றும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஆத்திகர்களும் நாத்திகர்களும் ஆண்டாளின் பாடல் வரிகளை எடுத்துக் கொண்டு, இது எந்தப் பறவை , அந்த பறவையின் குணாதிசயங்கள் என்னவென்று இன்றும் ஆலோசித்துக் கொண்டிருக்கின்றனர்கள்.  இன்று அதிகாலை  புள்ளரையன் கோயில்  தெருவில் அடியேன் உணர்ந்தது, ஆண்டாள் அனுபவித்த "புள்ளும் சிலம்பினகாண்" என்ற பாடல் வரிகள்.  அதிகாலை பெரும்பாலும் எழுந்திரு...

அசுரர் அரக்கர் -7 (அவுணன்)

படம்
ஆழ்வார்கள் அவுணன் என்ற சொல்லை பெரும்பாலும் அசுரர்களைக் குறிக்கும் சொல்லாக உபயோகப்படுத்தியுள்ளார்கள்.‌ "கோளரியின் உருவங் கொண்டு அவுணன் உடலம் குருதி குழம்பி எழ கூர் உகிரால்"  "முன் நரசிங்கமது ஆகி அவுணன் முக்கியத்தை முடிப்பான்"                      - பெரியாழ்வார்  "பரியன் ஆகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு  அரிய ஆதிப்பிரான்"                 - திருப்பாணாழ்வார்  "அம் கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆள் அரி ஆய் அவுணன் பொங்க ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதன் இடம்"            - திருமங்கையாழ்வார் "அந்திப்போது அவுணன் உடல் இடந்தானே" "புக்க அரி உரு ஆய் அவுணன் உடல் கீண்டு உகந்த சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன"  "செம் பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டவன்"                             - நம்மாழ்வார்  மேற்கூறிய பாசுரங்களில் அவுணன் என்பது ஹிரண்யகசிபுவைக்...

அசுரர் அரக்கர் - 6 (இராக்கதர் தானவர்)

படம்
அசுரர் அரக்கர் பற்றி நூல்களிலிருந்து தேடும்போது அதற்கு ஈடான வார்த்தைகளை ஆழ்வார்களும் கம்பரும் உபயோகப்படுத்தியுள்ளது என்பது தெரியவந்தது.‌ இராக்கதர் ஆழ்வார்களும் கம்பனும் அரக்கன் என்ற சொல்லுக்கு இராக்கதர் என்ற சொல்லையும் பயன்படுத்தியுள்ளனர்கள். " இராக்கதர் வாழ் இலங்கை பாழாளாக படை பொருதானுக்கு"                         - பெரியாழ்வார்  அரக்கர்கள் வாழும் இலங்கை என்பது ஆழ்வார் பாடல். "அண்டக் குலத்துக்கு அதிபதி ஆகி அசுரர் இராக்கதரை இண்டக் குலத்தை எடுத்துக் களைந்த இருடிகேசன்"                         - பெரியாழ்வார்  அசுரர் அரக்கர் குலத்தை களைந்த இருடிகேசன் என்ற எம்பெருமான் என்பது ஆழ்வார் பாடல் "முன நாள் வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து மலைபோல் உருவத்து ஓர் இராக்கதி மூக்கு அரிந்திட்டவன் காண்மின்"            - திருமங்கையாழ்வார்  சூர்ப்பணகை என்ற அரக்கி மூக்கை அரிந்திட்ட வரலாற்றைக் கூறும் ஆழ்வார் பாடல்.‌ கம்பராமாயணத்தி...

அசுரர் அரக்கர் கட்டுரையின் நோக்கம்

ஐந்தாவது பாகம் இரண்டு நாட்களுக்கு முன் வெளியிட்டோம். இதைப் பார்த்து எனது நண்பர்கள், ஐந்து பாகமாகக் கட்டுரை ஒரு ஆய்வுக்கான நோக்கம் போல்  கொண்டிருக்கிறது. அதன் காரணம் என்னவோ ? என்று வினவி இருந்தார்கள்.  இதே கேள்வி சில வாசகர்களிடம் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதனால், பதிலை எல்லோரிடமும் பகரும் விதத்தில் எழுதும் கட்டுரை.  அரக்கர் அசுரர் வார்த்தைகள் தமிழில் ஒரே அர்த்தத்தைக் குறிக்கும் வண்ணம் உபயோகப் படுத்தப்படுகிறது. பலரிடம் உரையாடும் போது ஒரே வார்த்தை என்பதனால் அரக்கர் இடத்தில் அசுரர் என்றும் , அசுரர் இடத்தில் அரக்கர் என்றும் உபயோகப் படுத்தலாம் , அதில் தவறு இல்லை என்று கூறுவதைக் கவனித்தேன்.  ஐந்து அல்லது ஆறு வருடத்திற்கு முன் திருப்பாவை "புள்ளின் வாய் " பாசுர அனுபவமாக ஒரு கட்டுரை வெளியிட்டேன். "பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானை" என்பது  இராவணனை அழித்த ராமனைக் கொண்டாடுகிறார்கள் என்பது வ்யாக்னம். அந்த பாடல் கிருஷ்ண ராம அவதாரத்தைக் கொண்டாடும் பாசுரம்.  அடியேன் கிள்ளி என்ற சப்தம் நகத்தினால் செய்யப்படும் காரியம் என்று கருதி , நரசிம்ம அவதாரத்துடன் ஒப்பிட...