இடுகைகள்

அண்ணல் இராமானுஜர் கண்ட புரட்சி - 3

படம்
பெரிய நம்பி வாழித்திருநாமம்  அம்புவியில் பதின்மர்கலை ஆய்ந்துரைப்போன் வாழியே ஆளவந்தார் தாளிணையை அடைந்துய்ந்தோன் வாழியே உம்பர் தொழும் அரங்கேசர்க்கு உகப்புடையோன் வாழியே ஓங்கு தனுக் கேட்டைதனில் உதித்த பிரான் வாழியே வம்பவிழ்தார் வரதருரை வாழி செய்தான் வாழியே மாறனேர் நம்பிக்கு வாழ்வளித்தான் வாழியே எம்பெருமானார் முனிவர்க்கு இதமுரைத்தான் வாழியே எழில் பெரிய நம்பி சரண் இனிதூழி வாழியே ஆசாரிய பரம்பரையில் இராமானுஜருக்கு முன், திருவரங்கத்தை நிர்வாகம் செய்து வந்தவர் ஆளவந்தார் என்ற ஆசாரியன். ஆளவந்தார் இராமானுஜரைத் திருத்திப் பணிகொள்ள பஞ்ச ஆசாரியர்களை நியமித்தார் என்று பார்த்தோம்.‌ இராமானுஜருக்குப் பஞ்ச சம்ஸ்காரம் செய்வித்த நேரடி ஆசாரியன் பெரிய நம்பி ஸ்வாமிகள். அவர்களுடன் சஹமாணவராக இருந்து சாஸ்திரங்களை கற்றவர் மாறனேர் நம்பி. இவர் மிகவும் தாழ்த்தப்பட்ட இனத்தார் என்று சொல்லப்படும் குலத்தில் அவதரித்து, உயர்ந்த மனிதராகச் சாஸ்திரங்களை கற்று நடைமுறையில் அவ்வாறே வாழ்ந்து வந்தவர். இவர் பாண்டிய நாட்டில் புராந்தகம் என்ற ஊரில், ஆனி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவர் ஆளவந்தாரை குருவாக ஏற்றுக் கொ...

ஆலின் மேல் ஆல்

படம்
 "மாலை நண்ணித் தொழுது  எழுமினோ  வினை கெட காலை மாலை கமல மலர் இட்டு நீர் வேலை மோதும் மதிள் சூழ்  திருக் கண்ணபுரத்து ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே "                              -  திருவாய்மொழி 9-10-1 "ஆலின் மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே"  ஆலின் மேல் - ஆலமர இலையின் மேல்  ஆல் அமர்ந்தான் - எம்பெருமான் அமர்ந்தான்  "துளியும் நீர்கொள் ஆலங் கட்டியும் மழையும் ஆலி யெனவகுத் தனரே” என்பது பிங்கல நிகண்டு. ஆல் என்பது ஆலமரம் மற்றும் நீர் என்பது பொருள்.  ஆலங்கட்டி மழை என்ற வார்த்தையும், ஆலவாய் என்பது நீர் சூழ்ந்த மதுரை நகரத்தின் பெயரும்,  ஆல் என்பது நீர் என்பதை எடுத்துக்காட்டுகிறது.  நீர் என்பது பரந்து விரிந்து செல்லக் கூடிய குணம். ஆலமரம் பரந்து விரிந்து வளரக்கூடிய மரத்தின் குணம்.  எம்பெருமான் நீர்மை குணம் கொண்டவன். ஆதலால்  அவனுக்குத்  திருநாமம் "நீர் வண்ணன்" என்று ஆழ்வார்கள் அழைக்கின்றனர். ஆதலால் அவனை ஆல் என்று அழைத்து அமர்ந்தான் என்று ஆழ்வார் அழைக்கிறார...

அக்னி பிரவேசம் - பாகவத அபசாரம் பரிகாரம்

படம்
  ஜீவாத்மா அதன் கர்மாவிற்கேற்ப பலமுறை உடல் என்ற சிறையில் வந்து தங்கி, அதன் கர்ம பலன்களைக் கழிக்கிறது என்பது சனாதன தர்மத்தின் அடிநாதமாக இருக்கும் கொள்கை. ஜீவாத்மா, தான் எண்ணக்கூடிய அல்லது செய்யக்கூடிய செயல்களை ஒரு வடிவத்தில் கொண்டு வருவதற்கு உடல் என்ற கருவி தேவைப்படுகிறது. ஆத்மாவுக்கு உடல் என்பது மிகவும் முக்கியம். உடல் மூலமாகவே செயல்கள் , எண்ணங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இது நாம் கண்ணால் பார்த்து அறியக்கூடிய வகையில் உள்ளது. ஆத்மாவுக்கு ஞானத்துவம், கர்த்தத்துவம், ஆனந்தத்துவம் அனைத்தும் உண்டு. ஆனால் உடல் மூலமாகவே அதைச் செய்து அனுபவிக்க முடியும். ஆத்மா தனியாக இயங்கமுடியுமா என்றால் முடியாது. அது இயங்குவதற்கு ஒரு சூஷ்ம (சிறிய) உடலாவது தேவைப்படுகிறது. தத்துவங்கள் மூன்று என்பது இராமானுஜர் ஏற்படுத்திய விசிஷ்டாத்வைதம் கொள்கை , அடிப்படையில் அசித், சித்,ஈஸ்வர என்ற மூன்று தத்துவங்கள். சைவ சித்தாந்த அடிப்படையிலும் தத்துவங்கள் மூன்று பசு, பதி, பாசம். ஆழ்வார்கள் நாயன்மார்கள் ஏற்படுத்திய சமய தத்துவங்கள் மூன்று என்று கொள்ளலாம். இதில் எந்த வேற்றுமையும் இல்லை. பிரம்மத்தில் வேறுபாடு உண்டு. வைணவர்கள் ஶ்...

தமிழ் காப்பியங்கள் போற்றும் சிறை இருந்தவள் ஏற்றம்

படம்
  இராமாயணத்தில் சீதையை இராமன் தீக்குளிக்கச் செய்து துன்புறுத்தினான். மேலும் கற்பகாலத்தில் அவளை மீண்டும் வனவாசம் அனுப்பித் துன்புறுத்தினான் என்ற குற்றச்சாற்றை இராமன் மேல் சுமத்தி , இராமன் ஒரு தீயவன் என்று தமிழகத்தில் சுற்றிவிடப்படுகிறது. பெண்ணை அடிமையாக நடத்தினான் என்ற குற்றச் சாற்றையும், இராமாயணம் தீயநூல் என்ற புரளியையும் அள்ளி வீசுகிறது. இதற்கு மாறாகப் பெண் பெருமை பேசிய மணிமேகலை சிலப்பதிகாரம் குண்டலகேசி நூல்கள் சிறந்தவை என்ற வாதம் போலித் தமிழர்களால் வைக்கப்படுகிறது. மேலே குறிப்பிட்ட ஐம்பெருங்காப்பிய நூல்கள் சிறந்தவை , அவை போற்றப்படக் கூடிய நூல்கள் என்பதில் ஒரு சிறுதுளி சந்தேகமும் இருக்கமுடியாது. அங்கே பெண்ணின் பெருமை பேசப்படுகிறது என்பதும் உண்மைதான்.  இராமாயணம் சிறை இருந்தவள் ஏற்றம் என்று சீதையின் ஏற்றத்தை கூற வந்த நூல் என்றே தமிழகம் கொண்டாடுகிறது. பிள்ளைலோகாசாரியார் தனது ஶ்ரீவசனபூஷணம் என்ற நூலில் விளக்கமாக அருளிச் செய்துள்ளார். இராமாயணம் சீதாதேவி என்ற பெண்ணின் ஏற்றத்தை ,சேதன ரூபத்தில் சொல்லவந்த நூல்.  "இதிஹாச ஸ்ரேஷ்டமான ஶ்ரீ இராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிற...

அண்ணல் இராமானுஜர் கண்ட புரட்சி

படம்
இராமானுஜர் கண்ட புரட்சி என்ற தலைப்பைக் கண்டவுடன் ,இராமானுஜர் காலத்திற்கு முன் சாதி பேதம் வைணவத்திலிருந்ததா என்று வினவினார் நண்பர் ஒருவர். அப்படி இல்லையென்றால் ஏன் இராமானுஜர் கண்ட புரட்சி என்று தலைப்பைக் கொடுத்தீர்கள் என்று வினவினார்.  இராமானுஜர் காலத்திற்கு முன் விசிஷ்டாத்வைதம் இருந்ததா? இல்லையா?. இருந்தது. அப்படி ஆனால் இராமானுஜர் இந்த தத்துவத்தை ஸ்தாபித்தார் என்று ஏன் கூறுகிறோம். கண்ணன் எம்பெருமானுக்கு இரண்டு தாய்களைப் போலவே , விசிஷ்டாத்வைதம் தத்துவத்திற்கு இரண்டு தாய்கள். "ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர" என்று கண்ணன் எம்பெருமானைப் பெற்ற தாய் தேவகி , வளர்த்த தாய் யசோதை. வளர்த்த யசோதை தாயின் மகனாகவே கண்ணன் உலகோருக்கு அறியப்பட்டார்.  அதேபோல் விசிஷ்டாத்வைதம் தத்துவத்தை ஈன்ற முதல் தாய் சடகோபன் இருக்க , வளர்த்த இதத் தாய் இராமானுஜரே ஸ்தாபித்தார் என்று ஏற்றம் கண்டார். இராமானுஜர் ஆழ்வார்கள் பாசுரங்களைக் கொண்டு, அத்வைதம் என்ற தத்துவத்திலிருந்து மாறுதலாக விசிஷ்ட அத்வைதம் என்ற தத்துவத்தை நிலை நாட்டினார். ஆழ்வார் பாசுரங்களே இதற்கான காரணம்.  ஆளவந்தார் இ...

அண்ணல் இராமானுஜர் கண்ட புரட்சி ( விளாஞ்சோலைப்பிள்ளை)

படம்
                                                       ஶ்ரீ விளாஞ்சோலைப்பிள்ளை                                                             (ஐப்பசி உத்திராட்டாதி) கண்ணன் எம்பெருமான் கீதையில் வர்ணாசிரம தருமத்தைப் போதிக்கிறார். அதைக் கடைப்பிடிக்கும் படி கீதையில் சொல்லியுள்ளார். ஆதலால் கீதையையும் , அது சார்ந்து நிற்கும் சனாதன தர்மத்தையும் சங்கறுக்க வேண்டும் என்றும், அதை வேரோடு அறுத்துச் சாய்க்க வேண்டும் என்றும் குறிப்பாகத் தமிழகத்தில் நிறையச் சப்தங்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் உண்மையில் கீதையையும் , சனாதன தர்ம நெறிமுறைகளையும் தீவிரமாக கடைப்பிடித்து வந்த சமயப்பெரியவர்கள் வரலாற்றை உற்று நோக்கினால் உண்மைப் புலப்படும். ஆழ்வார் ஆசாரியார் பிறப்புகளில் சாதிப் பார்ப்பது என்பது மிகவும் அபசாரம். அவர்கள...

எண்களின் ஏற்றம் ( எண்களின் வடிவமே எம்பெருமான்)

படம்
  ஒன்பது : ஸ்வாமி பிள்ளைலோகச்சாரியார் " அஷ்டாதச ரகசியம்" என்று 18 ரகசிய கிரந்தங்கள் இயற்றியுள்ளார். இவர் தனது 103 வயதில் மலிக்காபூர் படையெடுப்பு கொடுமையிலிருந்து மூலவர் ரங்கநாதரை கல்திரையிட்டு மறைத்தார். நம்பெருமாள் என்று அழைக்கப்படும் உற்சவர் திருவரங்கநாதனை எழுந்தருளச் செய்துகொண்டு தெற்கு நோக்கிப் பயணித்தார். நான்கு வருடங்கள் திருமாலிருஞ்சோலை மலைப்பகுதியில் வாழ்ந்து , 107வது வயதில் ஆசாரியன் திருவடியை அடைந்தார். அவர் இயற்றிய 18 ரகசிய கிரந்தங்களில் ஒன்று "நவவித சம்பந்தம்". ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையிலான ஒன்பது சம்பந்தங்களை விஸ்தாரமாக விளக்குகிறார். இங்கே நாம் ஒன்பது சம்பந்தங்களின் முழு விவரத்தையும் பார்க்கப் போவது இல்லை. நவவித சம்பந்தம்: "பிதா ச ரக்ஷகஸ்ஸேஷீ பர்த்தா ஜ்ஞேயோ ரமாபதி: ஸ்வாம்யா தாரோ மமாத்மா ச போக்தா சாத்யமநூதித:" 1. பிதா புத்ர சம்பந்தம் (படைப்பவன், படைக்கப்பட்டவன்) 2. ரக்ஷ்ய ரக்ஷகம் சம்பந்தம் (காப்பாளன், காக்கப்படுவன்) 3. சேஷ சேஷி சம்பந்தம் (ஆண்டான் , அடிமை) 4...

கராவினைக் காத்த தாமரை நாயகன் ( சனாதனம்)

படம்
    பெண்ணுலாம் சடையி னானும்* பிரமனு முன்னைக் காண்பான், எண்ணிலா வூழி யூழி* தவஞ்செய்தார் வெள்கி நிற்ப,* விண்ணுளார் வியப்ப வந்து* ஆனைக்கன் றருளை யீந்த- கண்ணறா,* உன்னை யென்னோ* களைகணாக் கருது மாறே! சிவபெருமானும், பிரமனும் எம்பெருமானின் தர்சனத்தைப் பெறப் பல யுகங்கள் தவம் செய்துகொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் தலைகுனிந்து நிற்கும் வகையில் கஜேந்திரனுக்கு அருளை ஈர்த்தார் என்று பாடல் கூறுகிறது.  தேவர்களும் முனிவர்களும் தவம் புரிந்து காத்திருக்க , விலங்கினத்துக்கு இரங்கி அருள் புரிந்தவன் எம்பெருமான். சரணம் என்று தஞ்சமடைந்தவர்களை நழுவ விடாதவன் என்பதனால் அவனுக்குத் திருநாமம் "அச்சுதா" என்று வழங்கப்பட்டது.  "அச்சுதா" என்றால் நழுவ விடாதவன் என்று பொருள் . தண்ணீரில் மலரக்கூடிய மலர் " தாமரை மலர்".‌‌ தாமரை மலர் அழகானது , பார்ப்பவர்களின் மனதைக் கவரக்கூடியது .அதே போல் எம்பெருமானின் திருமேனி. அவனுடைய ஒவ்வொரு அங்கமும் ஒவ்வொரு தாமரை. தாமரைக் காடு சேர்ந்தாற் போல் அவனது திருமேனி.  தாமரை‌ போன்று அழகானவர், கவரக்கூடியவர். "கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும்* கண்-இணையும் அரவிந்தம்...

எண்களின் ஏற்றம் -4 ( எண்களின் வடிவம் எம்பெருமான்)

படம்
  ஐந்து:   பஞ்ச பூதங்களின் வடிவமாகவும், அவை உணர்த்தும் ஐந்து குணங்களாகவும் எம்பெருமான் எழுந்தருளியுள்ளார் என்று   திருமழிசைப்பிரானின்   வாக்குக் கொண்டு பார்த்தோம். பஞ்சாயுதங்களை ஏந்தியவன் என்ற பெயரை உடையவன் எம்பெருமான். ஆழ்வார்கள் பாடல்கள் ஏராளம், "சங்கு வில் வாள் தண்டு சக்கரம் ஏந்திய அங்கைகளாலே  வந்து அச்சோ அச்சோ"                         - பெரியாழ்வார் திருமொழி 1-8-2 என்றும், "கங்கை நீர் பயந்த பாத-பங்கயத்து எம் அண்ணலே அங்கை  ஆழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்"                                                                                                                           ...