பிராயக்ராஜ் யாத்திரை - 1 (காசி யாத்திரை )
Namo Ghat Corridor துபாயிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டு சனி காலை 9.30 மணிக்கு வாரணாசி விமான நிலையம் வந்து சேர்ந்தேன். விமான நிலையத்திலிருந்து நாட்டுக் கோட்டை செட்டியார் சத்திரம் செல்ல நான்கு சக்கர வாகனம் பிடித்தேன். கோயில் செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன என்று சொல்லி வாரணாசி சந்திப்பு ரயில் நிலையம் பக்கம் இறக்கிவிட்டு விட்டார். 4-5 கிமீ தூரம் செல்ல வேண்டும். இருப்பது மனிதன் மிதிக்கும் சைக்கிள் ரிக்ஷா, எலக்ட்ரிக் ஆட்டோ. எலக்ட்ரிக் ஆட்டோ செல்லாது என்று சொல்லவும் , சைக்கிள் ரிக்சாவை பிடித்தேன். இதைப் பிடிப்பதற்கும் 1கிமீ நடந்து ஆகிவிட்டது. 2 கிமீ சென்ற பிறகு அவரும் இறக்கிவிட்டு விட்டார். கையிலொரு ட்ராலி பேக், தோளில் ஒரு பேக்கைப் போட்டுக் கொண்டு சத்திரம் நோக்கி நடந்தேன். மக்கள் வெள்ளத்தில் கூட்டமே நம்மை நகர்த்திய அனுபவத்தை உணர்ந்தேன். சத்திரத்தை அடைந்து குளித்து விட்டு காசி ஈஸ்வரனைச் சேவிக்கப் புறப்பட்டேன். கூட்டம் அதிகம். நான்கு வாயில்கள் வழியாக ஈஸ்வரனைத் தர்சனம் செய...