பூர்ணம் -1
இது வேத வாக்கியம்.
பூர்ணம் என்பதற்குத் தமிழ் அகராதிகள் கூறும் பொருள் என்பது நிறைவு , முழுமை, குறைபாடற்ற, மிகுதி, மனநிறைவு, முடிவு.
இறைவன் முழுமையானவன் . முழுமையான இறைவன் இங்கும் அங்கும் இருக்கிறான். முழுமையிலிருந்து முழுமையான உலகத்தைத் தோற்றுவிக்கிறான். முழுமையிலிருந்து முழுமையை எடுத்துவிட்டால் முழுமையே எஞ்சும்.
இதில் பூர்ணம் மற்றும் முழுமை ஏழு தடவை உபயோகப்படுத்தப் பட்டுள்ளது. முழுமை மற்றும் நிறைவு என்பது மட்டுமே பொருந்தும். அதை உணர்ந்தவன் மன நிறைவு அடைந்து பேரானந்தம் பெறுகிறான்.
முழுமையை உணர முயல்கிறான் முயல்கிறான், முயற்சி செய்து கொண்டே மனநிறைவு அடையப்பெறுகிறான்.
ஒரு செயலை ஒருவன் செய்ய முற்படும்போது, அதனை முழுமையாக , நிறைவாக முடிக்கவேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. அது ஒரு தேவையான பண்பாக இவ்வுலகில் கருதப்படுகிறது. முழுமையாக முடிவடைந்த செயலினால் வெற்றி கிடைக்கும், அதன்மூலம் மன அமைதி கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. நம்பிக்கையே வாழ்க்கை.
இந்த நம்பிக்கை அதாவது ஒரு செயலை முழுமையாகச் செய்யவேண்டும் , நிறைவாகச் செய்யவேண்டும் என்ற எண்ணம் சில சமயங்களில் மன அமைதியைக் கெடுக்கும் பொறியாக மாறிவிடுகின்றன.
முழுமையான , நிறைவான மனிதன் உண்டா? என்றால், முழுமை அடைவதற்கு முயற்சி செய்கிறேன் என்ற பதில் ஒவ்வொருவரிடமிருந்து வரும். அப்படியானால் இன்னும் முழுமை பெறவில்லை. முழுமை பெறாத மனநிலையில் ஒருவிதமான மனமகிழ்ச்சியுடன் நம்பிக்கையுடன் வாழ்க்கையை நடத்துகிறான். அதுவே சரியான நிலைப்பாடு.
எனது மூன்று பட விமர்சன கட்டுரையிலும் படத்தைப் பற்றி விளக்காமல், மன அமைதி , போதும் என்ற மனம், பேராசை பெருநஷ்டம் என்ற கருத்தை மையமாகக் கொண்டு விளக்கியிருப்பேன். இதற்கும் முழுமைக்கும் ஒரு சம்பந்தம் உள்ளதை உணர முடியும்.
ஒரு செயலில் முழுமை அடைந்தும் மனநிறைவு அடையப் பெறாத மக்கள்,
முழுமை அடைய மீண்டும் முண்டும் முயல்வதனால், முழுமை அடையுமா? அல்லது வேறு விளைவுகள் ஏற்படுமா? மன அமைதி என்னவாகும்? என்பதைப் பற்றி அடுத்தடுத்த கட்டுரைகளில் ............
மகர சடகோபன்
தென்திருப்பேரை
ஒரு செயலை முழுமையாகச் செய்யவேண்டும் , நிறைவாகச் செய்யவேண்டும் என்ற எண்ணம் சில சமயங்களில் மன அமைதியைக் கெடுக்கும் பொறியாக மாறிவிடுகின்றன--பல இடத்தில் நான் அனுபவித்தது
பதிலளிநீக்குஎண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ண வேண்டும் என்பார் மகாகவி
பதிலளிநீக்குஅந்த நல்லவையாக பூரணமாக முடிவது தான் இந்த பூரணம்