அசுரர் அரக்கர் - 4
அசுரர்கள் என்பவர்கள் காஷ்யப ரிஷி திதி தம்பதியினருக்குப் பிறந்த குழந்தைகள். இதைத் தெளிவாகக் கம்ப இராமாயணத்தில் ஆரண்ய காண்டத்தில் சடாயுகாண் படலத்தில் கவிச்சக்கரவர்த்தி கம்பன் வர்ணிக்கிறார். உலக உயிர்களின் தோற்ற வரலாறு என்று 5 பாடல்களில் கம்பன் , தக்கன் மகள்கள் பதின்மூவர் காஷ்யப ரிஷியை மணந்து , உயிர்கள் உருவாகுவதை விளக்குகிறார். "தக்கன் மனை வயிற்று உதித்தார் ஐம்பதின்மர் தடங் கொங்கைத் தையலாருள் தொக்க பதின்மூவரை அக்காசிபனும் புணர்ந்தனன்; அத் தோகைமாருள் மிக்க அதிதிப் பெயராள், முப்பத்து முக்கோடி விண்ணோர் ஈந்தாள் ; மைக் கருங் கண் திதி என்பாள், அதின் இரட்டி அசுரர்தமை வயிறு வாய்த்தாள் " (2805) அதிதி மூலமாகப் பிறந்தவர்கள் விண்ணோர் கள் என்றும் , தேவர்கள் என்றும், அமரர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். முப்பத்து முக்கோடி தேவர்கள் என்று சொல்லப்படுகிறது. ஆண்டாள் திருப்பாவையில் " முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்" என்று முப்பத்து முக்கோடி தேவர்களை அமரர்கள் என்று அழைக்கிறாள். திருமால் வாமன அவதாரம் எடுக்க