இரு துருவங்கள் ஒரு புள்ளியில் -1
ஸ்ரீமந் நாராயணன் அடியவர்களைக் காப்பாற்றுவதற்காகவும், தர்மத்தை மீண்டும் நிலை நாட்டுவதற்காகவும், அவ்வப்பொழுது பல அவதாரங்களைச் செய்துள்ளான். எண்ணற்ற அவதாரங்கள் எடுத்திருந்தாளும், குறிப்பாக தசாவதாரம் என்று பத்து அவதாரங்கள் மிகவும் பிரபலமாகப் பேசப்படுகின்றன நம் பாரத தேசத்தில். பத்து அவதாரங்களை வரிசைக்கிரமமாகப் பாடியுள்ளனர் ஆழ்வார்கள். “ தேவுடைய மீனமாய் ஆமையாய் ஏனமாய், அரியாய் குறளாய் மூவுருவின் இராமனாய், கண்ணனாய் கற்கியாய் முடிப்பான் கோயில்” என்பது பெரியாழ்வார் வாக்கு. “மீனோடு ஆமை கேழல் அரி குறளாய், முன்னும் இராமனாய் தானாய் பின்னும் இராமனாய் , தாமோதரனாய் கற்கியும் ஆவான் “ என்பது திருமங்கையாழ்வார் வாக்கு. அதிலும் குறிப்பாக இரண்டு அவதாரங்கள் மிகவும் விசேஷம் ஒன்று ஸ்ரீராமவதாரம், மற்றொன்று ஸ்ரீகிருஷ்ணவதாரம் . இவர்களையே பாட்டுடை தலைவனாகக் கொண்டு, பாரதத்தில் மிகப்பெரிய இரண்டு இதிகாசங்கள் ஸ்ரீ ராமாயணம், ஸ்ரீ மஹாபாரதம் எழுதப்பட்டுள்ளன. இருவரும் தர்மத்தை நிலைநாட்டுவதற்கும், அடியவர்களின் துன்பங்களைத் துடைப்பதற்காக அவதாரம் செய்தது மட்டுமல்லாமல் , சில குணங்களையும், நல்வழிகளையும் வாழ்ந