எண்களின் ஏற்றம் ( எண்களின் வடிவமே எம்பெருமான்)
ஒன்பது : ஸ்வாமி பிள்ளைலோகச்சாரியார் " அஷ்டாதச ரகசியம்" என்று 18 ரகசிய கிரந்தங்கள் இயற்றியுள்ளார். இவர் தனது 103 வயதில் மலிக்காபூர் படையெடுப்பு கொடுமையிலிருந்து மூலவர் ரங்கநாதரை கல்திரையிட்டு மறைத்தார். நம்பெருமாள் என்று அழைக்கப்படும் உற்சவர் திருவரங்கநாதனை எழுந்தருளச் செய்துகொண்டு தெற்கு நோக்கிப் பயணித்தார். நான்கு வருடங்கள் திருமாலிருஞ்சோலை மலைப்பகுதியில் வாழ்ந்து , 107வது வயதில் ஆசாரியன் திருவடியை அடைந்தார். அவர் இயற்றிய 18 ரகசிய கிரந்தங்களில் ஒன்று "நவவித சம்பந்தம்". ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையிலான ஒன்பது சம்பந்தங்களை விஸ்தாரமாக விளக்குகிறார். இங்கே நாம் ஒன்பது சம்பந்தங்களின் முழு விவரத்தையும் பார்க்கப் போவது இல்லை. நவவித சம்பந்தம்: "பிதா ச ரக்ஷகஸ்ஸேஷீ பர்த்தா ஜ்ஞேயோ ரமாபதி: ஸ்வாம்யா தாரோ மமாத்மா ச போக்தா சாத்யமநூதித:" 1. பிதா புத்ர சம்பந்தம் (படைப்பவன், படைக்கப்பட்டவன்) 2. ரக்ஷ்ய ரக்ஷகம் சம்பந்தம் (காப்பாளன், காக்கப்படுவன்) 3. சேஷ சேஷி சம்பந்தம் (ஆண்டான் , அடிமை) 4