விஜயதசமி விழா
இன்று விஜய தசமி விழா
இது ஒரு சனாதன தர்மத்தின் திருவிழா.
வைணவம் , சைவம் என்ற இரு பிரிவுகளும், அம்மனை வழிபடக்கூடிய சாக்தம் என்ற பிரிவினரும், அனைத்து ஷண்மத பிரிவினரும் இந்த நவராத்திரி திருவிழாவை அவரவர் வழியில் கொண்டாடி , இறுதியில் விஜயதசமி அன்று நிறைவு செய்கிறார்கள்.
"பலமே வாழ்வு பலவீனமே மரணம்" என்பது விவேகானந்தர் வாக்கு.
பலம் என்பது தனி மனிதனுக்கும், சமுதாயத்துக்கும், சமுதாயம் சார்ந்த தேசத்துக்கும்
ஒரு நாட்டை
குறியீடாக இந்த மூன்றையும் மூன்று நாட்கள் வீதம் கொண்டாடி , இறுதியில் வெற்றியை அருளவேண்டும் என்பதுதான் அனைவராலும் கொண்டாடப்படும் பிரார்த்தனை. அவரவர் வழியில் அவரவர் நின்று வழிபடுங்கள். வழிபாட்டு முறைகளில் குறை காணாமல் நிறைக் கண்டு ஒற்றுமையுடன் மகிழ்ச்சி அடையுங்கள். இறுதியில் ஒற்றுமை , மகிழ்ச்சி
திருவிழா என்பது சமுதாயம் சோர்வடையாமல் இருக்க, அவ்வப்போது புத்துணர்ச்சி ஊட்டவும், புதிய சக்தியை மனிதர்களுக்கு வழங்கவும், சமுதாய ஒற்றுமையை அவ்வப்போது நிலை நாட்டவும், பதிய உறவுகளை உருவாக்கவும் ஏற்படுத்தப்பட்டது. திருவிழாக்கள் எல்லாமே முழு நிலா காலங்களில் கொண்டாடப்பட்டுள்ளன என்பது சங்க நூல் மூலம் அறிகிறோம்
"நிலவே நீல் நிற விசும்பில்
ஒரு சாரார் மூன்று நாட்கள் பார்வதிக்கும் அதாவது துர்க்கை, மூன்று நாட்கள்
ஒரு சாரார் காளியம்மன், ஒன்பது நாள் போரில்
ஒரு சாரார் ஒன்பது நாளும்
ஒருசாரார் ஒன்பது நாளும் ஒன்பது சக்திகளை வழிபட்டு , பத்தாவது நாள் விஜயதசமி, ஆயுத பூஜை நாளாகக் கொண்டாடுகின்றனர்.
ஒருசாரார் அயோத்தி சக்கரவர்த்தி
ஆனால் பாரத தேசம் முழுவதும் ஒரே நேரத்தில் ஒன்பது நாளும் கொண்டாடப்படக்கூடிய ஒரு விழாவாக இருக்கிறது என்பது நம்மை ஒரு புள்ளியில் இணைக்கிறது.
விஜய தசமி அன்று வில்லுக்கு வெற்றி
இராமனும் வன்னி மரத்தை வலம் செய்து , இலங்கைக்குச் சென்று இராவணனை வதம் செய்தான் என்ற நம்பிக்கையில் மராட்டிய மன்னர்கள் வன்னி மரத்தை வழிபட்டு வன்னிமர இலையைப் பிராசாதமாகப் பெற்று போருக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
இன்றும் தமிழ்நாட்டில் பெருமாள் கோவில்களில் அம்பு விடுதல் என்ற ஒரு நிகழ்வு நடைபெறுகிறது. வன்னி மரத்தின் மீது அம்பு விடுதல் அல்லது அம்பு குத்தல் என்ற நிகழ்வுகள் சிவன், விஷ்ணு , முருகன், அம்பாள் கோவில்களில் நடைபெறுகின்றன.
இந்த அம்பு குத்தல் நிகழ்வுகளைச் சங்க நூல் ஒன்றில் ஒரு குறிப்பு கிடைக்கப் பெறுகின்றன. இல்லையென்றால் தமிழகத்தில் இது ஆரியத் திணிப்பு என்றொரு திரிபு வாதம் ஏற்பட்டு விடும்.
"தெம்முனை சிதைத்த கடும்பரிப்புரவி
வார்கழல் பொலிந்த வன்கண் மழவர்
பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம்"
- அகநானூறு 187
தொடை என்பது அம்பு. "புதிய அம்பு குத்தல் விழா" என்ற " பூந்தொடை விழவு", நீண்ட கழல்களையுடைய மழவர் இனமக்கள் ( வன்னிய மக்கள்) கொண்டாடிய விழா என்பது தெரியவருகிறது.
கம்பர் இயற்றிய சிலை எழுபது என்ற நூலின் தொடக்கத்தில்,
" சொன் மங்கலம் பொருந்தும் தொல்லுலகிற் பல்லுயிரும்
தன் மங்கலம் பெருந்தும் நான்மறையு நனிவிளங்கும்
வன் மங்கலம் பொருந்தி வளர் வனிய குலவரசர்
வின் மங்கலம் பொருந்தும் விறற்றசமி நாட்கொளினே"
வலிமையும் மங்கையும் பொருந்திய நீண்ட இவற்றினையுடைய வன்னிய குல அரசர்கள், மங்கலம் பொருந்திய விஜயதசமி நன்னாளில் வில்லேந்தினால் , மங்கலாமான பண்டைய உலகில் பல உயிர்களுக்கு மங்கலம் உண்டாகும் , நான்கு மறைகளும் சிறக்கும், என்பது மேற்கூறிய பாடலின் விளக்கம்.
விற்படையில் சிறப்புற்று விளங்கிய க்ஷத்திரிய வம்சத்தில் வந்த வன்னியக் குல மக்கள் விஜயதசமி அன்று வில்விழா கொண்டாடுவது என்பது மரபு. அன்று வன்னி மரத்தின் மீது புதிய அம்பு குத்தல் என்று வில் பயிற்சியைத் தொடங்கியதாகவும் தெரிகிறது. இந்தப் பண்பாடு இன்று சிதைந்து காணப்படுகிறது.
வன்னி மரம் என்பது என்பது வீரத்தைக் குறிக்கும் மரம். வீரத்தை அம்பு குத்தி வெற்றி அடைந்த " வெற்றி நாள்" .
இந்த வெற்றி நன்னாளில் பல இனம், சமயம் சார்ந்த வேற்றுமைகளைக் கலைந்து, ஒற்றுமையாகச் சனாதன தர்ம நெறியில் விழாவைக் கொண்டாடி, அதர்மத்தை அழித்து, ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். அவரவர் இஷ்ட தெய்வங்கள் அவரவர் வழியில் நற்கதியை அருளட்டும்.
நம்மாழ்வார் திருவாய்மொழியில் அருளியபடி
"அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவு இலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே"
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு , பலமே வாழ்வு"
வாழ்வதற்கான வழிமுறைகளையே மனிதநேயங்கள் விரும்பும்
வாழ்வதற்கான வழிமுறைகளை வகுத்தது மனிதநேயங்கள்
அவரவர் வழியில் நின்று மனிதநேயம் காப்போம்
அவரவர் வழிநின்று ஒற்றுமையுடன் வெற்றி காண்போம்
விஜயதசமி நல்வாழ்த்துகள்
மகர சடகோபன்
தென்திருப்பேரை
கருத்துகள்
கருத்துரையிடுக