அசுரர் அரக்கர் -7 (அவுணன்)
ஆழ்வார்கள் அவுணன் என்ற சொல்லை பெரும்பாலும் அசுரர்களைக் குறிக்கும் சொல்லாக உபயோகப்படுத்தியுள்ளார்கள். "கோளரியின் உருவங் கொண்டு அவுணன் உடலம் குருதி குழம்பி எழ கூர் உகிரால்" "முன் நரசிங்கமது ஆகி அவுணன் முக்கியத்தை முடிப்பான்" - பெரியாழ்வார் "பரியன் ஆகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு அரிய ஆதிப்பிரான்" - திருப்பாணாழ்வார் "அம் கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆள் அரி ஆய் அவுணன் பொங்க ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதன் இடம்" - திருமங்கையாழ்வார் "அந்திப்போது அவுணன் உடல் இடந்தானே" "புக்க அரி உரு ஆய் அவுணன் உடல் கீண்டு உகந்த சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன" "செம் பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டவன்" - நம்மாழ்வார் மேற்கூறிய பாசுரங்களில் அவுணன் என்பது ஹிரண்யகசிபுவைக் குறிக்கும் வண்ணம் ஆழ்வார்கள் பாசுரங்களை அமைத்துள்ளார்கள். "அரு மா நிலம் அன்று அளப்பான் குறள் ஆய் அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த பெருமான்" &q