எண்களின் ஏற்றம் ( எண்களின் வடிவம் எம்பெருமான்) - 2
நவதிருப்பதி கடந்த பாகத்தில் திருமங்கையாழ்வார் எண்களைக் கொண்டு ஏறு முகமாகவும் இறங்கு முகமாகவும் தேர்த் தட்டுகளைக் கட்டமைத்து ஆராவமுதனை எழுந்தருளச் செய்தார் என்பதனை அனுபவித்தோம். தேர்த் தட்டுகள் கட்டமைப்பு என்பது குறியீடு அடிப்படையில், தனிமனிதனுக்கும் சமுதாயத்துக்கும் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைக் குறிக்கிறது. தேர் என்பது ஊர்கூடி சமுதாயமாக இழுப்பது போல், ஏற்ற இறக்கங்களைச் சமுதாயமாகச் சரிசெய்ய (Team work) வேண்டும் என்பதுதான் குறியீடு. எண்களின் மகிமையைத் தேர் பந்தன கவி மூலம் அனுபவித்தோம். அடிப்படை எண்கள் பத்து என்றாலும் , முதல் எண் பூஜ்யம். பூஜ்யம் என்பது ஒரு எண்ணுக்குப் பின் வரும்பொழுது அதன் மதிப்புக் கிடைக்கப்பெறுகிறது அல்லது உயர்கிறது. தனியாக அதற்கு மதிப்பு கிடையாது. இந்த பூஜ்யத்தைக் கழித்து மற்றைய எண்கள் ஒன்பது. அடிப்படை எண்கள் என்பது இந்த ஒன்பது எண்கள். கோள்கள் ஒன்பது. இப்பொழுது நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் திருவிழா ஒன்பது நாட்கள் நவராத்திரி. எங்களது ஊரான தென்திருப்பேரைச் சுற்றி அமைந்துள்ள வைணவ ஸ்தலங்கள் நவதிருப்பதிகள் என்றும், சில ஸ்தலங்கள் நவ கைலாசம