பூர்ணம் -22 (சரணாகதி)
எட்டெழுத்து மந்திரம் என்பது " ஓம் நமோ நாராயணய". பூர்ணமடைய அறிய வேண்டிய மந்திரம் இந்த எட்டெழுத்து மந்திரம் என்பது வைஷ்ணவ நம்பிக்கை. கிருஷ்ணன் பகவத்கீதை 10.35 யில், "மாஸாநாம் மார்கசீர்ஷோஹம்" மார்கழி மாதம் என்பது மாதத்தில் எட்டாவது மாதம். கிருஷ்ணனுக்குப் பிடித்த மாதம். அவன் பிறந்தது ( எட்டாம் நாள்) அஷ்டமி திதியில் எட்டாவது குழந்தையாகப் பிறந்து பகவத்கீதை என்ற உயர்ந்த ஞானத்தை உலகுக்கு வழங்கி "எட்டெழுத்து மந்திரமாக" ஏற்றம் கண்டான். முமுஷூப் படியில் அஷ்டாக்ஷர மந்திரத்தின் பெருமையை மிகவும் விஸ்தாரமாக விளக்குகிறார் பிள்ளைலோகாச்சாரியார். பாவ புண்ணியங்களைப் போக்கவல்ல மந்திரம் இந்த எட்டெழுத்து.முமுஷூக்கு ( முக்தியை விரும்புவர்) அறிய வேண்டிய மந்திரம் மூன்று. அதில் பிரதான மந்திரம் "திருமந்திரம்". திருமந்திரம் என்பது "ஓம் நமோ நாராயணய" பாவபுண்ணியங்கள் என்ற இரு வினைகளையும் ஒழித்து , இறைவன் அடிப் பற்றுபவர் பிறவா நிலையை அடைகிறார்கள் என்று கிருஷ்ணன் கீதையில் கூறியதைப் பார்த்தோம். வள...