பூர்ணம் - 12
பத்துக் குதிரைகள் பூட்டிய ரதத்தைச் செலுத்தும் ஒருவனுக்கு, குதிரைகளைச் சரியான பாதையில் செலுத்துவதற்குக் கடிவாளம் என்ற ஒரு கயிறு தேவைப்படுகிறது. அந்தக் கயிற்றின் மூலம் 10 குதிரைகளையும் அடக்கித் தான் செல்ல வேண்டிய பாதையில் செலுத்தி, சேர வேண்டிய இடத்துக்கு ரதத்தை ஓட்டுபவன் செல்கிறான். 10 குதிரைகள் என்பது பத்து இந்திரியங்கள், கடிவாளம் என்பது மனம் , ரதம் என்பது உடல் , ரதத்தைச் செலுத்துபவன் என்பது ஒவ்வொரு ஜீவாத்மாவும். சிறுவயதில் எனக்கு ஒர் அனுபவம் உண்டு. எங்கள் வீட்டில் மாட்டு வண்டி ஒன்று இருந்தது. அதில் மாடுகளைப் பூட்டி மூன்று மைல் தொலைவில் இருக்கும் கிராமத்துப் பள்ளிக்குச் செல்வது என்பது எனது தாத்தாவின் அன்றாடப் பழக்கம். சில சமயங்களில் மாட்டை ஓட்டுபவன் தூங்கினாலும் அல்லது மூக்காணங்கயிற்றை ஒன்றும் செய்யாமல் அப்படியே விட்டு விட்டாலும் மாடுகள் தானகவே அந்தப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும். இந்த அனுபவம் என்பது நிறைய அன்பர்களுக்கு இருந்திருக்கும். இங்கு மூக்காணங்கயிறு என்பது மனம். பழக்கப்பட்ட மாடுகள் என்றால் மட்டுமே எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் சேரவேண்டிய இடத்துக்குச் செல்லும். புத...