பூர்ணம் - 11
தனக்கு உரித்தானக் கடமையைச் செய்வதில் தயங்கி , குழம்பிக் கொண்டிருக்கும் அர்ஜூனனுக்குக் கடமையை நிறைவேற்றும் படி உற்சாகப் படுத்தும் சொற்கள் கிருஷ்ணனின் கீதை என்ற அமுத மொழிகள்.
அர்ஜூனனை காமதேனு பசுவாக நிறுத்தி கீதை என்னும் பாலைக் கறந்து ஜீவாத்மா என்ற கன்றுகளுக்கு வழங்குகிறான் பால் கறக்கும் இடையனாகக் கிருஷ்ணன்.
கடமையைச் செய்யும் போது பலனை எதிர்பார்க்காமல் இச்சையற்றுச் செய்யவும் என்று கீதையில் உரைக்கிறான் கிருஷ்ணன்.
இதில் சிலருக்குச் சந்தேகம் என்பது, இச்சையில்லாமல் எதிர்பார்ப்பு இல்லாமல் ஏதாவது ஒரு செயலைச் செய்யமுடியுமா? அல்லது அதற்கு மனம்தான் சம்மதிக்குமா? .
இந்த மனோநிலை என்பது முக்காலத்திலும் உலகம் முழுவதும் பொதுவாக இருக்கக்கூடிய சூழ்நிலை. இங்குதான் மனம் புத்தி என்பது மனிதனுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது.
இந்த ஆசை, எதிர்பார்ப்பு என்பது உலகில் நிலவும் நல்லவற்றுக்கும் கெடுதலுக்கும் உந்து சக்தியாக இருக்கின்றன.
இச்சை அல்லது ஆசை என்பது அளவுக்கு மீறிச் செல்லும்போது தனிமனிதச் சரிவுக்கும், தனிமனித அழிவுக்கும், சமுதாய அழிவுக்கும், ஏன் முழு இயற்கை அழிவுக்கும் காரணமாக இருக்கின்றன.
ஆசை , எதிர்பார்ப்பு என்பது நிறைவேறாமல் போகும்போது அதனுடன் பிறந்த கோபமும், வெறுப்பும் ஆக்கிரமித்து அழிவுப் பாதைக்கு அழைத்துச்செல்கிறது.
கிருஷ்ணன் கீதையில் விருப்பு வெறுப்பு இல்லாமல் சமநிலையில் நின்று ஒரு காரியத்தைச் செய்யும்படி கட்டளையிடுகிறான். அந்தச் சமநிலையை "யோக நிலை" என்று குறிப்பிடுகிறான்.
கிருஷ்ணன் கீதையில் ,
"யோகஸ்த்த: குரு கர்மாணி வங்கம் த்யக்த்வா தநஞ்சய|
ஸித்யஸித்யோ: ஸமோ பூத்வா ஸமத்வம் யோக உச்யதே||". 2-48
யோகா என்பது அர்ஜூனா, சமநிலையில் இருந்து விருப்பு வெறுப்பு இல்லாமல் வெற்றித் தோல்விகளையும் சமமாகக் கருதி , பற்றற்றச் சமநிலையில் காரியங்களைச் செய்வது என்று தெளிவாகக் கூறுகிறான்.
மேலும் மூன்றாம் அத்தியாயத்தில் புலன்களை அடக்கி விருப்பு வெறுப்பு இல்லாமல் காரியம் செய்வதையும் வலியுறுத்துகிறான்
"இந்த்ரியஸ்யேந்த்ரியஸ்யார்த்தே ராகத்வேஷௌ வ்யவஸ்திதௌ|
தயோர் ந வசம் ஆகத்சேத் தௌ ஹ்யஸ்ய பரிபந்திநௌ||" 3-34
ஞான இந்திரியங்கள் (கண், காது, மூக்கு, வாய், உடம்பிலுள்ள தோல்) கர்ம இந்திரியங்கள் ( கை, கால், வாய், குடல் , கழிவு மற்றும் உடல்உறவு துவாரங்கள்). ஞானக் கர்ம இந்தியங்களினால் ராகத்வேஷம்( விருப்பு வெறுப்பு) உண்டாகிறது. ராகம் என்றால் ஆசை , நாம் ஆசைப்பட்டது கிடைக்கவில்லையென்றால் த்வேஷம் அதாவது வெறுப்பு ஏற்படுகிறது, இவைகளைப் போக்கவேண்டும். இவைகள் நமக்குப் பெரிய தடைகளாக இருக்கின்றன என்று கிருஷ்ணன் கீதையில் போதிக்கிறான்.
இயற்கையும் இறைவனின் படைப்பு, அனைத்து உயிர்களும் இறைவனின் படைப்பு , அனைத்தும் அவனிடமிருந்து தோன்றியது, அனைத்திலும் அவன் இருக்கிறான், உன்னுள்ளும் என்னுள்ளும், இயற்கையினுள்ளும் இறைவன் நீக்கமற நிறைந்துள்ளான் என்ற எண்ணத்துடன் நமது கடமைகளைப் பூர்த்திச் செய்வதற்குச் சமநிலையில் செயல்படும்போது பூர்ணம் என்பது உறுதி.
பகவானின் படைப்பில் உலகம் என்பது இரட்டை நிலையில் கலந்து இருக்கும். ஆண் பெண் பகல் இரவு, வெற்றி தோல்வி, மகிழ்ச்சி துன்பம் , விருப்பு வெறுப்பு, வெப்பம் குளிர்ச்சி, எதிர்பார்ப்பு ஏமாற்றம் , ஆசை கோபம் என்று கலந்து இருப்பினும் சமநிலையில் அதாவது யோக நிலையில் நின்று கடமையைச் செய் என்ற பகவானின் போதனையை ஏற்றுக் கொண்டால் மன அமைதி நிலவும். இதற்கான மனநிலை என்பது கடினம்.
எல்லா இந்திரியங்களின் செயல்களுக்கும் காரணம் மனம். அந்த மனத்தை எப்படி வெல்வது என்று அடுத்தடுத்து எடுத்துக்கூறுவதை மேலும் பார்ப்போம்
.....(தொடரும்)
மகர சடகோபன்
தென்திருப்பேரை
Excellent
பதிலளிநீக்குநன்றி
நீக்குஅருமை சடகோபன் !!!
நீக்குபற்றற்ற செயலை எப்படி செய்வது என்பதை ஆன்மீக தத்துவத்தின் மூலம் விளக்க முற்பட்டுள்ளீர்கள்.
ஏதோ ஒரு இடத்தில் பகவத் கீதையில் படித்த ஞாபகம்" உன்னுடைய கர்மவினைக்கு ஏற்ப உனக்கு காரியங்கள் அமையப்பெறுகின்றன" எந்த ஒரு முயற்சியிலும் முடிவு நிர்மாணிக்கப்பட்ட ஒன்றுதான் முயற்சி மட்டும்தான் உன்னுடையதாக இருக்க வேண்டும் முடிவைப் பற்றி சிந்திக்க கூடாது.
நீ எடுக்கும் முயற்சியில் நீ எதிர்பார்க்கின்ற முடிவு எட்டப்படுவதும் அல்லது நீ எதிர்பார்க்கின்ற முடிவு எட்டப்படாமல் இருப்பதும் விதியின் அமைப்பே இந்த முடிவுகள் மூலமாக உன்னுடைய கர்மவினை இந்தப் பிறவியில் கழிகின்றது.
இதற்குக் காரணமாய் இருக்கின்ற பஞ்சேந்திரியங்களும் கண்மேந்திரியங்களும் கருவிகளாக செயல்பட்டு ஆன்மாவுடன் தொடர்புபடுத்தி நம்மை முடிவெடுக்க தூன்டுகிறது அதுவே நம் விதி.
குளிர்
மனம் என்ற குரங்கை வெல்வது கடினம், வென்றால் வாழ்க்கை நிம்மதி
பதிலளிநீக்குநன்றி
நீக்குஆசை, எதிர்பார்ப்பு என்பது உலகில் நிலவும் நல்லவற்றுக்கும் கெடுதலுக்கும் உந்து சக்தியாக இருக்கின்றன.👌
பதிலளிநீக்குநன்றி ஜி
நீக்கு