பூர்ணம் - 8


இந்த தொடருக்குப் பூர்ணம் என்று தலைப்பு கொடுத்த காரணம் என்பது , அன்றாட வாழ்க்கையில் மனநிறைவு , மனமகிழ்ச்சி என்பது ஒவ்வொருவருடைய இலட்சியமாக இருக்கும். அப்படி வாழ்ந்தால் அவர்கள் முழுமையாக வாழ்ந்து அனுபவத்தைப் பெற்றவர்கள் என்ற நிலையை உணர்கிறார்கள். அந்த முழுமைக்குப் பூர்ணம் என்று அர்த்தம் கொண்டு இந்த தொடர் எழுத ஆரம்பித்தேன் என்ற தன்னிலை விளக்கத்தை அளித்துக் கொண்டு இந்த தொடரைப் பார்ப்போம். 

முழுமை மற்றும் மன நிறைவு என்பது ஒவ்வொருவரிடமும் உள்ளது. பிரபஞ்சத்தில் உள்ளது. அதைத் தீர்மானிப்பது என்பது அவர்களுடைய கையில் உள்ளது. 

கூட்டுக் குடும்பம் மற்றும் சமூகமாக வாழ்வது என்பது பல பண்புகளைப் பெருக்கி அழுத்தத்தைக் குறைத்து மன மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்று பார்த்தோம். இங்கே சகிப்புத் தன்மை என்பது முதன்மையாக இருக்க வேண்டும். அதைக் கொண்டு விட்டுக் கொடுத்து அணுகினால் மனநிறைவு என்பது சாத்தியம் கூட்டுக் குடும்பத்தில்.‌

வாழ்வின் நோக்கம் அறிந்து செயல்படும்போது, செய்யும் காரியத்தில் விருப்பம் ஏற்பட்டு, ஒரு தொடர்ச்சியான செயல் ஏற்படுகிறது. அதன் மூலம் மன மகிழ்ச்சி ஏற்படுகிறது என்பதனையும் பார்த்தோம். 

எல்லை அறிந்து ஒவ்வொருவருடைய செயல் அமையும்போது, மனச்சிதைவு, உடல் கோளாறு ஏற்படாமல் தடுக்க முடியும். எல்லை அறிந்து செயலில் ஈடுபடும்போது, அந்த செயல் என்பது வாழ்வின் நோக்கத்துக்கும் சமூகத்துக்கும் உதவிக்கரமாக இருக்க வேண்டும் என்று நினைவு கொண்டால் மனநிறைவு அடைந்து மகிழ்ச்சி உருவாகும். 

கவலைப்படுவதை நிறுத்த வேண்டும்.‌ சொல்வது என்பது எளிமை. நாம் பொதுவாகக் கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தை நினைத்து கவலை கொள்கிறோம். அதனால் நிகழ்காலம் ஏற்படுத்தும் சில இன்ப நிகழ்ச்சிகள் , அதனால் ஏற்படும் மகிழ்ச்சியை இழக்க நேரிடுகிறோம். நிகழ்காலத்தில் நாம் வாழ்வது கிடையாது. 

ஸ்பென்சர் ஜான்சன் (Spencer Johnson) தனது தி பெரஸன்ட் (The Present) புத்தகத்தில், கடந்த காலத்தில் நடந்தவற்றை நம்மால் மாற்ற முடியாது, ஆனால் சில பாடங்களை கற்றுக் கொள்ளலாம். அதன் மூலம் எதிர்கால திட்டமிடுதலைச் சரியாக ஏற்படுத்தலாம். இதன் மூலம் நிகழ்கால செயல்களில் வாழ்ந்து செயல்படுத்தும் போது மனநிறைவு ஏற்படும் நிகழ்கால வாழ்க்கை செயல்களைப் பற்றிக் கூறுகிறார். 

நாம் நிகழ்கால செயல்களில் இருக்க வேண்டும் என்று சொல்வதற்குக் காரணம் "தொடர் ஓட்ட நிலையில்" (State of Flow) மனதையும் செயலையும் நிறுத்த முடியும். மனதும் செயலும் ஒரே நிலையில் சிந்தித்துப் பயணிக்கும் போது, செயலின் மூலம் உருவாக்கப்படும் முடிவுகளை அவ்வப்போது உணரமுடியும். தொடர் ஓட்ட நிலையில் செயல் முழுமை பெறுவதற்கும் வாழ்வின் நோக்கத்தை அடைவதற்கும் உதவியாக இருக்கும். அதன் மூலம் மன அமைதி, மன நிறைவு ஏற்படும்.‌ இதை இக்கிகை (IKIGAI) புத்தகத்தில் இச்சி-கோ-இச்சி-இ (Ichi-go-Ichi-e) என்று குறிப்பிடுகிறார்கள். இந்த ஜப்பானிய வார்த்தை சொல்வது என்னவென்றால், "நிகழ்காலத்தில் கவனம் செலுத்தவும், வாழ்க்கை நமக்குக் கொண்டுவரும் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவிக்கவும் கற்றுக்கொடுக்கிறது".

பரிபூரணமாக வாழ முடியுமா என்றால் சிறிது கடினம். முழுமை அடைந்தாலும் மனநிறைவு (Mindsatisfaction) இல்லையென்றால் பரிபூரணப் பொறிக்குள் சென்று சுழற்சியில் சிக்குவோம். ஆதலால் ஒவ்வொருவரும் மூன்று பரிபூரணப் பொறிகளை ( Three Perfection Traps) தெரிந்து, அதிலிருந்து நாம் எவ்வாறு விலகி இருப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டும். பரிபூரணப் பொறி விதிகளிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று சொல்வதன் மூலம் முழுப்பரிபூர்ணம் அடைய முடியாது என்பதனைக் காட்டுகிறது.‌ 

சில நேரங்களில் சில செயல்களில் பூர்ணம் இல்லாவிட்டாலும்(அபூர்ண செயல்கள்), சில மனிதர்களிடம் நாம் நினைத்த மாதிரி பூர்ணம் இல்லாவிட்டாலும் (அபூர்ண மனிதர்கள்), அதனை ஏற்றுக் கொள்ளப் பழகும் போது சகிப்புத் தன்மை உருவாக்கப்படுகிறது. அதன் மூலம் மன அமைதி, மனநிறைவு ஏற்படுகிறது. 

பரிபூரணம் இல்லாத வாழ்க்கையை (அபூர்ணம்) அனுசரித்துச் செல்வதன் மூலம், அனாவசியமாக ஏற்படும் கவலைகள் குறைந்து மன அழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். 

இக்கிகை என்ற புத்தகத்தில் "வாபி சபி" (Wabi Sabi) என்று ஒரு வார்த்தையைக் குறிப்பிடுகிறார் ஆசிரியர். அந்த வார்த்தை சொல்வது என்னவென்றால், வளர்ச்சிக்கான வாய்ப்பாக அபூரணத்தின் அழகைப் பாராட்ட wabi sabi நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. 

அபூர்ண சகிப்பு என்பது பூர்ணத்திற்கு வழிவகுக்கிறது என்பதும் பாடமாக அமைகிறது. 

தொடர் ஓட்ட நிலையில் நின்று நிகழ்கால வாழ்க்கையை சில அபூர்ண சகிப்புத் தன்மையுடன் அனுபவித்து உணர தொடங்கினால் அந்த நொடியில் மனநிறைவு மன மகிழ்ச்சி ஏற்படுவது என்பது உண்மை. அதனை அடுத்த தொடரில் அனுபவிப்போம்...... ( தொடரும்) 

மகர சடகோபன் தென்திருப்பேரை 






கருத்துகள்

  1. இன்றைய காலத்தில் அனைவரும் உணர்ந்து நடைமுறை படுத்தவேண்டும். அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  2. Excellent Sadagopan.
    இப்படி சின்ன சின்ன அபூர்வ உணர்வுகளை பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றி எழுதுவது மிகவும் பாராட்டப்பட வேண்டியது.
    நன்றி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எல்லைச்சாமி

பிராயக்ராஜ் யாத்திரை - 1 (காசி யாத்திரை )

பிராயக்ராஜ் யாத்திரை - 2 (திரிவேணி சங்கமம்)