கோண்
கோண் என்பதற்குக் கோணுதல், வளைவு, மாறுபாடு, கொடுங்கோன்மை, கோணம், நுண்ணிய பகுதி, பாத்திரத்தின் மூக்கு என்று பல அர்த்தங்கள் தமிழ் அகராதியில் உள்ளது. அம்பறாத்தூணி புத்தகத்தைப் படிக்கும்போது, இந்த சொல்லைக் கம்பன் பயன்படுத்திய இடத்தைச் சொல்லி இது ஒரு விஞ்ஞான சொல்லாக இருப்பதை ஆச்சரியத்துடன் ஆசிரியர் நாஞ்சில் நாடன் அவர்கள் பதிவிடுகிறார். அது நமக்கும் மிகவும் ஆச்சரியத்தைத் தந்தது. யுத்த காண்டம் இரணியன் வதைப் படலத்தில் , “‘சாணினும் உளன்; ஓர் தன்மை அணுவினைச் சதகூறு இட்ட கோணினும் உளன்; மாமேருக் குன்றினும் உளன்; இந் நின்ற தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்; இத்தன்மை காணுதி விரைவின் என்றான்; நன்று எனக் கனகன் சொன்னான்" எம்பெருமான் எங்குளன் என்று இரணியன் கேட்க , பக்த பிரகலாதன் பதில் கூறும் பாடலாக அமைந்துள்ளது. நன்று என்று கனகன் (இரணியன்) சொன்னான் என்று பாடல் இறுதியில் உள்ளது. சாணிலும் - சாண் என்ற அளவிலும் உளன். மாமேரு குன்றிலும் உளன். இங்குள்ள தூணிலும் உளன். நீ சொன்ன சொல்லினும் உளன் என்று கூறும் போது, "ஓர் தன்மை அணுவினைச் சதகூறு இட்ட கோணினும் உளன்" ஒன்றாக உள்