சங்க தமிழ் (மாலை) -2
சங்க நூல்கள் காட்டும் முழு நிலா காலங்களில் தமிழர்கள் கொண்டாடும் விழாக்கள். பங்குனி உத்திரநாள் : “உருவ வெண்மணல் முருகுநாறு தண்பொழிற் பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்” (அகம்.137:8-9) ஓண நாள்: “கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந்தார் மாயோன் மேய ஓணநல் நாள்” (மதுரை.590-591) கார்த்திகை நாள்: "மழைகால் நீங்கிய மாக விசும்பில் குறுமுயல் மறுநிறம் கிளர, மதி நிறைந்து, அறுமீன் சேரும் அகல்இருள் நடுநாள்: மறுகுவிளக் குறுத்து, மாலை தூக்கிப், பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய விழவுடன் அயர வருக" - அகநானூறு 141-10 தை நீராடல்: "நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும் தைஇத் தண் கயம் போல" - ஐங்குறுநூறு "இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ, தைஇத் திங்கள் தண் கயம் படியும்பெருந் தோட் குறுமகள்" - நற்றிணை "வை எயிற்றவர் நாப்பண், வகை அணிப் பொலிந்து, நீ தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ?" - கலித்தொகை "பாரி பறம்பில் பனிச் சுனைத் தெண்ணீர் தைஇத் திங்கள் தண்ணிய