முள்ளம்பன்றி


சமீபத்தில் ஒரு புத்தகம் படித்தேன்.‌ அதில் ஒரு கதை முள்ளம்பன்றியிடமிருந்துக் கற்றுக்கொள்ள வேண்டிய மேலாண்மைப் பாடம் ஒன்றுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.‌ 


முள்ளம்பன்றி தனியாக இருக்கும்போது அதன் முட்கள் அதற்குப் பலமாக அமைகின்றன.எதிரி காட்டு விலங்கினங்கள் முள்ளம்பன்றியைத் தாக்கும்போது, பின்பக்கமாகச் சென்று பின்பக்கம் முட்களால்  எதிரி விலங்கினங்களைத் தாக்குகின்றன. பின்பக்க முட்கள் அதற்குப் பலமாக அமைந்துள்ளது. 


கடுங்குளிர் காலத்தில் முள்ளம்பன்றிகள் குளிர் தாங்கமுடியாமல் இறந்துவிடும் சூழ்நிலை ஏற்படுவது வழக்கம். அந்த சூழ்நிலையைத் தவிர்க்கும் பொருட்டு முள்ளம்பன்றிகள் அனைத்தும் நெருங்கி வந்து ஒன்றோடு ஒன்றாக ஒட்டிநின்று வெப்பத்தை ஏற்படுத்தி கடுங்குளிரைத் தாங்கும் சூழ்நிலையைத் தங்களுக்கு தாங்களே முன்வந்து உருவாக்கிக் கொள்கின்றன. அப்பொழுது அதன் பலமாக அமைந்த முட்கள், ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளும் போது வலிகளை ஏற்படுத்துகிறது.‌ 


முள்ளம்பன்றிகள் கடுங்குளிர் காலத்தில் உயிர்வாழ்வதற்காக, தங்கள் முட்கள் ஏற்படுத்தும் வலிகளைப் பொறுத்துக் கொண்டு வாழ்கின்றன. இங்கே குறிக்கோள் என்பது உயிர் வாழ்வது என்பதுதான். குறிக்கோள் நிறைவேறுவதற்குச் சில வலிகளைக் குழுமமாகத் தாங்கிக் கொள்கின்றன.  அந்த வலிகளே உயிர் வாழ்வதற்கான வெப்பத்தைக் கொடுக்கிறது. 


இதிலிருந்து குழுமமாக வேலைச் செய்யும் போது குழு உறுப்பினர்களின் தனிப்பட்ட பலமாக இருக்கும் குணங்கள்,   குழுப்பணியில் சில பிரச்சினைகள் அல்லது மனவருத்தத்தை ஏற்படுத்தும். குறிக்கோள்  நிறைவேறுவதற்காகக்  குழுமமாகப் பிரச்சினைகளைத் தாங்கிக் கொண்டு குறிக்கோள் நிறைவேற உழைக்கவேண்டும்.


இந்த மேலாண்மை புத்தகத்தில் இந்த கதையைப் படிக்கும்போது அடியேன் சிறிது விரிவுபடுத்திப் பல சூழ்நிலைக்குப் பொறுத்திப்பார்த்தேன். மேலும் முள்ளம்பன்றி பற்றித் தேடிப் படித்ததில் சில அரிய செய்திகளும் கிடைக்கப்பெற்றன. அதனையும் வைத்துக் கொண்டு இந்த கட்டுரையை இந்து சமுதாயத்துக்குப் ஒப்பிட்டுப் பார்த்தேன்.


கூட்டமாக இருந்தால் எதிரிகளையும் எளிதாக வீழ்த்தமுடியும். அதன் இனங்கள் பாதுகாக்கப்படும் என்பதும் பலமாக அமையும் என்பது முள்ளம்பன்றியின் பாடம். முட்கள் வலியை ஏற்படுத்துகிறது என்று நினைத்து , முட்களை வெட்டினால் தனியாக இருக்கும்போது தன்னுயிருக்கு ஆபத்தாகிவிடும். ஆதலால் குழுமம் பணியில் தனது தனித்தன்மையான தனக்குப் பலமாக இருக்கும் சில விஷயங்களைக் குறைத்துக் கொள்ளாமல், குழுமத்துடன் சகித்துக் கொண்டு வேலைச் செய்வது குழு வெற்றியைத் தேடித்தரும். குழு உறுப்பினர்களின் தனித்தன்மையும் காக்கப்படும் என்பது அடியேன் உணர்ந்த உண்மை.


தனித்தன்மையான குணங்கள் மற்றும் தனித்தன்மையான குணங்கள் குழுப்பணியில் ஏற்படுத்தும் சிலபிரச்சினைகளைச் சகித்துக் கொள்ளும் தன்மை இரண்டுமே ஒருவனுக்குத் தேவை என்பதுதான் இதன் பாடமாக அமைகிறது. 


இந்தப் பாடம் குடும்பம், உறவுகள், சமூகம், தேசம் அனைத்துக்கும் பொருந்தும். அதுவும் நமது இந்து சமுதாயத்திற்கு நன்றாகப் பொருந்தும் என்பது அடியேன் புத்தகத்தை வாசிக்கும்போது உணர்ந்த உண்மை. இந்து சமுதாயத்தில் பல நம்பிக்கைகள், பல மொழிகள், பல உணவு பழக்கவழக்கங்கள், பல சாதி அமைப்புகள் கொண்ட மக்கள் இருக்கிறார்கள்.‌ அவர்கள் எல்லோரும் சனாதனிகள் என்ற ஒரு இனமாகவும், வேதம் என்ற புனித நூல்களை ஆதாரமாகக் கொண்டும், பாரத மண்ணின் மரபுகளை பின்பற்றுவார்களாகவும் இருக்கிறார்கள். 


முள்ளம்பன்றிகளின் முட்களின் தனித்தன்மை போல் ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தன்மை, கலாச்சாரச் செறிவு என்பது தனியான சிறப்பாகவும் பெருமிதமாகவும் அமைகிறது. அந்த பெருமிதமாத் தன்மையே சில சமயங்களில் இந்து சமுதாயத்தை வேறுபடுத்திக் காட்டுகிறது. இந்த வேறுபாடுச்சூழலைப் பயன்படுத்தி, பிறமதத்தினர்கள் இந்து சமுதாயத்தை அழிக்க நினைக்கின்றனர்.  


இந்து சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரின் தனித்தன்மையும் ஓரளவு அந்நிய தாக்குதலிருந்து முள்ளம்பன்றியின் முட்கள் போல் காப்பாற்றுகின்றன. ஆனால் சூழ்நிலை மாறும்போது குளிர்காலம் போல் என்றால் ஒருவரோடு ஒருவர் இணைந்து, ஒவ்வொருவரின் தனித்தன்மை குழுப்பணியில் ஏற்படுத்தும் சில வலிகளைச் சகித்துக் கொண்டு, முள்ளம்பன்றிகள் உயிர் பிழைப்பிற்காக ஒன்றாக இணைவதுபோல், ஒன்றாக இணைந்தால் சனாதனம் தர்மம் உயிர் பிழைத்து பல்லாண்டு வாழும்.  


முள்ளம்பன்றிகள் அமைதியான விலங்கினம், மற்றவை அதைச் சீண்டும் போது தாக்குவதற்கு முயற்சி செய்கின்றன ( Survival Battle). முள்ளம்பன்றிகள் ஆண் பெண் என்று இணைந்து வாழ்ந்து , இரண்டு அல்லது மூன்று குட்டிகளைப் பெற்று, குட்டிகளையும் சேர்ந்து வளர்க்கின்றன. இதையெல்லாம் பார்க்கும்போது பாரதீய மண்ணின் கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறது என்ற எண்ணம் தோன்றியது. மேலும் பல்வேறு காரணங்களினால் அதன் இனம் மிகவேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன. அதன் இனப்பெருக்கம் என்பதும் அதிகமாக இல்லை என்பதும் அதன் இனம் அழிவதற்கு ஒரு காரணமாக உள்ளன. 


மேலும் முள்ளம்பன்றி இனப்பெருக்கம் குறைப்பு, மற்றவர்கள் வேட்டையில் உயிர் இழப்பது என்பது அந்த இனம் அழிவதற்கு ஒரு காரணமாக இருப்பதுபோல் , இந்து சமுதாயத்தின் இனப்பெருக்க கட்டுப்பாடு, மற்ற மதத்தினரின் தாக்குதல் என்பது அந்த இனம் அழிவதற்கு ஒரு காரணமாக நாளை அமையலாம்.‌


முள்ளம்பன்றியின் இயற்கையான குணங்கள் இந்து சமுதாயத்திற்கு நிறையப் பாடங்களைக் கற்றுத் தருகின்றன என்பது அடியேனின் புரிதல். 


ஆதலால் சனாதனிகள் முள்ளம்பன்றியின் முட்கள் போல் அவர்கள் பின்பற்றும் சம்பிரதாயத்தின் தனித்தன்மையுடனும், சூழ்நிலைகள் முற்றி அழிக்கவரும்போது ஒன்றோடு ஒன்றாக இணைந்து , இணையும்போது ஏற்படும் சில பிரச்சினைகளைச் சகித்துக் கொண்டு ஒரே கூட்டமாகச் சூழ்நிலையை வெற்றி கொள்ளும் தன்மையையும் ஒருங்கே அமையப்பெற்று பல்லாண்டு வாழவேண்டும் என்பது இதிலிருந்து கற்றுக் கொண்ட பாடம். 


ஒவ்வொரு பெருமிதமும் நமது தருமத்திற்குப் பலமாக அமைந்துள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆயிரங்கால் மண்டபத்தில் ஒரு கால் சாய்ந்தாலும் வீழ்ந்தாலும் மண்டபத்திற்கு ஒரு சேதமும் ஏற்படாது போல் நமது தருமம் கட்டி வைக்கப்பட்டுள்ளது. அந்த பெருமிதத்தை  உணர்ந்து, அதனால் ஏற்படும் சில பிரச்சினைகள் அல்லது வலிகளும் நன்மைத்தரக்கூடியவை என்று நினைத்து சகித்து வாழ்வது என்பது தருமம் மேன்மேலும் தழைக்கவும், சூழ்நிலைகள் மாறும்போது  அழிப்பவர்களை ஒன்றாக இணைந்து வெல்வதற்கும் துணையாக இருக்கும்.‌


இந்த உள்வலிகளைப் பெரிதுப்படுத்தாமல், சகிப்புத்தன்மைகளைப் பின்பற்றத் தவறும்போது சாதிகளின் பெருமிதம், சைவத்தின் பெருமிதம், வைணவத்தின் பெருமிதம், ஒவ்வொரு ஷண்மதத்தின் பெருமிதம், பாரதீய மொழிகளின் பெருமிதம், பாரதீய மண்ணின் கலாச்சாரம், உணவு உடை பழக்கவழக்கங்களின் பெருமிதம், நிலத்தின் பெருமிதம் அனைத்தும் அழிக்கப்படும் அல்லது காணாமல் போய்விடும். அதனுடைய எஞ்சிய துகள்களைக்கூடக் காணமுடியாது . 


தனித்தன்மை காப்போம்!
சகிப்புத் தன்மை வளர்ப்போம் !!
சனாதன ஒற்றுமையைப் போற்றுவோம் !!!

 மகர சடகோபன்
தென்திருப்பேரை 





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

கம்பனின் அம்பறாத்தூணி

மக்களின் தலைவன்