அண்ணல் இராமானுஜர் கண்ட புரட்சி - 10

 

 செய்வதில் பக்தர்கள் அனைவருக்கும் விருப்பம் அதிகமாக இருப்பது என்பது அறிந்த ஒன்று. ஆனால் பாகவத  ,    என்பது சற்று குறைந்தே காணப்படும். அதற்கான காரணம் அவர்களை , ஆசாரியன் என்று நினைக்காமல்.     நினைத்து மனிதன்   தொண்டு புரிவதா என்ற எண்ணமே , தொண்டு செய்வதற்குத் தடையாக அமைகிறது. ஆதலால்  சனாதன தர்மத்தில் குரு வந்தனம் என்று ஆரம்பித்து, குருவுக்கு   செய்வதை தலையாய    போதிக்கிறது.   வைஷ்ணவம் ஆசாரியன் மட்டுமல்லாமல் அடியார்க்கு அடியார் என்ற நிலைவரை சென்று  செய்வதை    என்று போற்றுகிறது. மேலும் ஒரு படி சென்று      பாகவத   மிகவும் பாவம் என்று   வைஷ்ணவத்தில் சொல்லப் பட்டது.  எல்லை நிலமான அடியார்க்கு அடியார் என்ற நிலையில் இருக்கும் பாகவதனுக்கு  செய்வது என்பது தம்முடன் நின்றுவிடாமல்,  தொடர வேண்டும் என்பதே சிறந்த கோட்பாடு என்று சொன்னவர்  வைஷ்ணவ குலபதி,   , ஆழ்வார்களின் தலைவர்  நம்மாழ்வார் திருவாய்மொழியில் கூறிய கருத்து.  நம்மாழ்வரே ஶ்ரீ வைஷ்ணவத்தின் ஆதி மானிட குரு என்பது குறிப்பிடத்தக்கது. 


பரம்பரை என்பது இங்கே ஶ்ரீ வைஷ்ணவ பரம்பரையாகக்  கருதப்படுகிறது.


திருவாய்மொழி பாசுரங்கள்:


"அடி ஆர்ந்த வையம் உண்டு ஆல் இலை அன்னவசம் செய்யும,

படி யாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு,

அடியார் அடியார் தம் அடியார் அடியார் தமக்கு

அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே"

                                             - திருவாய்மொழி 3-7-10


"வாய்க்க தமியேற்கு ஊழிதோறுஊழி ஊழி மாகாயாம்- 

பூக்கொள் மேனி நான்குதோள் பொன்ஆழிக்கை என்அம்மான்

நீக்கம்இல்லா அடியார்தம் அடியார் அடியார் அடியார் எம் 

கோக்கள் அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடே"

                                           - திருவாய்மொழி 8-10-10


நம்மாழ்வாரின் திருவாய்மொழியில், சிந்தையினாலும் சொல்லாலும் செய்கையினாலும் தந்தை தாய் என்றடைந்த வண்குருகூர் சடகோபன் என்று சொன்னபடி, சிந்திப்பதைச் சொல்லவேண்டும், சொல்வதைச் செய்யவேண்டும், அப்படி திரிகரணங்களினாலும் ஒன்றைச் செயல்படுத்துபவன் சிறந்த தலைவன். 


இந்த பாகவத அபிமானத்தை அண்ணல் இராமானுஜர், வடகாவேரியில் தீர்த்தமாடி திரும்பும் கால் பிள்ளை உறங்காவில்லி தாஸர் திருத்தோள்களில் கையிட்டு வருவது மூலம், நம்மாழ்வார் காட்டிய எல்லை நிலை கைங்கரியத்தைச் செய்து காட்டியவர்.‌  சிந்திப்பதையும் சொல்வதையும் செயல்களின் மூலம் செய்து காட்டியவர் ஆசாரிய தலைவராகத் திகழ்ந்த ஶ்ரீராமானுஜர்.


இந்த சம்பவம் "வார்த்தமாலை" வார்த்தை எண்: 326ல் இவ்வாறாகக் கொடுக்கப்பட்டுள்ளது,


வார்த்தை எண் 326:


"பெரிய திருநாள் தீர்த்தம் ப்ராஸாதித்துப் பெருமாளெழுந்தருளுகிறபோது எம்பெருமானார் தாமும் தீர்த்தமாடி ஸேவித்தெழுந்தருளுகிறவர், பிள்ளை உறங்காவில்லி தாஸர் திருக்கை கொடுத்துவர 'இதென்?' என்று சிலர் விண்ணப்பஞ்செய்ய; 'ஜந்மம் உயர்ந்திருக்கத் தாழ நின்றோமே என்கிற அபிமாநமுணாடிறே எல்லார்க்கும்: அக்கொத்தையுமில்லாதவரிறே யிவர்' என்றருளிச்செய்தருளினார்."


"உயர்ந்த ப்ராஹ்மணாதி வர்ணங்களில் பிறந்தவர்களுக்கு, சிலர்க்கு அடிமைத் தொழில் செய்வதென்றால் 'உயர்ந்த குலத்தில் பிறந்து இழிதொழில் செய்கிறோமே' என்று குலாபிமானமும், அதனால் வரும் தயக்கமும், வருத்தமும் ஏற்படக்கூடும். மற்றவர்களுக்கு கைங்கர்யம் செய்வதற்கே ஏற்பட்ட நாலாம் வர்ணத்திலே பிறந்த பிள்ளை உறங்காவில்லி தாஸருக்கு அந்த அபிமானமும், தயக்கமும், வருத்தமும் ஏற்பட இடமில்லை. அதனால் உள்ளத்தால் பரிஸுத்தரான அவருடைய ஸ்பர்ஸம் தமக்கும் வர்ணாசிரமாபிமானத்தைப் போக்கிப் பரிஸுத்தியளிக்கவல்லது" என்று எம்பெருமானார் (இராமானுஜர்) திருவுள்ளம். இதனாலேயே பிள்ளை உறங்காவில்லி தாஸர் வேதகப்பொன்    (இரும்பை பொன்னாக்கும் ஸ்பர்ஸவேதி) போன்றவர் என்னும் கருத்தமைந்த "இராமானுஜ ஸ்பர்ஸவேதி" என்னும் பெயரால் அழைக்கப்பட்டார்.


பிள்ளை உறங்காவில்லி தாஸரின் ஸ்பர்ஸம் இராமானுஜருக்கு பரிஸீத்தமுண்டானது என்பது வார்த்தாமாலை வார்த்தைகள்.‌


வடிவழகிய நம்பிதாஸர் எழுதிய "ஶ்ரீ ராமானுஜ வைபவம்" என்ற நூலில் , இராமானுஜர் தீர்த்தமாடி திரும்பும்போது பிள்ளை உறங்காவில்லி தாஸர் கையைப் பிடித்து நடந்து வந்த சம்பவத்தை ஒரு செய்யுளில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


"நிலத்தின் நடந்து காவிரியில்நீரா டத்தாம் போய் பொழுது

குலத்தின் உயர்ந்த சாத்தினபேர் கோக னகக்கை பிடித்தேகி

நலத்தின் மிக்கார் புனலாடி மீளும் போது ஞானத்தில்

புலத்தின் மிக்க பிள்ளைதிருக் கையைப் பிடித்தே போதுவரால்" 


இந்தச் செயல் ஶ்ரீரங்க அந்தணர்களுக்கு சில சந்தேகங்கள் ஏற்படுத்த, எல்லா அந்தணர்களின் சார்பாக இராமானுஜரின் முக்கிய சீடரான முதலியாண்டான், ஸ்வாமியிடம் சென்று அவர் செய்யும் காரியத்திற்கான நியாயத்தைக் கண்டறிய அணுகினார். 

ஶ்ரீராமானுஜ வைபவம் என்ற நூலில் இவ்வாறாக குறிப்பிடப்பட்டுள்ளது.


"நீராட எழுந்தருளி நீமீள வருமளவில்

பேராசை உடைத் தொண்டர் பின்முன் வரப் பிள்ளைகரம்

தாராநின் றானுனக்குச் சாத்தாதான் என ஒன்றும்

ஓராதே நீபிடித்து வருதிறத்தை உரையென்றான்"


"அத்திறத்தைக் கேட்டருளி ஆசி லாத உடையவரும்

பத்து வார்த்தை எடுத்தங்ஙன் பழுதி லாத ஆண்டான்சீர்ச்

சித்தம் தெளியக் கட்டுரைத்தார் சிலநாள் அவணம் சென்றளவில்

ஒத்திவ் உலகை ஆள்மன்னன் உறையூர் நின்றும் ஒருகானில்"


முதலியாண்டான் கேட்ட சந்தேகங்களுக்கு இராமானுஜர் பத்து வார்த்தைகளில் சமாதானம் அருளிச்செய்தார் என்று வடிவழகிய நம்பிதாஸர் எழுதிய ஶ்ரீராமானுஜ வைபவம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வார்த்த மாலை 450ல், உடையவர் (இராமானுஜர்) பிள்ளை உறங்காவில்லி தாஸர் விஷயமாக முதலியாண்டானுக்கு பணித்த பத்து வார்த்தைகள்:  நாம் பத்து வார்த்தைகளையும் பார்க்கப் போவதில்லை. 


"ஶ்ரீ வைஷ்ணவர்கள்: அவ்வறிவுக்கு விஷயமாயிருப்பவன் எம்பெருமான். அவ்வறிவின் பலம் எம்பெருமானைக் குறித்த கைங்கர்யம். அந்தப் பலமாகிற கைங்கர்யம் ரசிப்பது - பாகவத கைங்கர்யமா வரையில் சென்றே பின்பே என்று கருத்து"   என்று தொடங்குகிறார் இராமானுஜர். நம்மாழ்வார் திருவாய்மொழியில் கூறிய கருத்தை முன்னோர் முறை தப்பாமல் இங்கு மொழிந்து வார்த்தைகளை ஆரம்பிக்கிறார். 


பத்து வார்த்தைகளில் ப்ராஹ்மணர்கள் அல்லாத ஶ்ரீ வைஷ்ணவர்களின் தன்னேற்றத்தை ஒவ்வொன்றாக சொல்லி, கடைசியில் கீழ்கண்ட வார்த்தைகளுடன் முடிவு செய்கிறார் ஸ்வாமி இராமானுஜர். 


"இந்த ஏற்றங்கள் ப்ராஹ்மணரல்லாத ஶ்ரீ வைஷ்ணவர்களுக்கு இருக்கிறது என்று திருவுள்ளம் பற்றியே பெருமாளாகிற ஶ்ரீ ராமபிரான் ரிஷிககளைக் காட்டிலும் குகப்பெருமாளிடமும் வானரமுதலிகளிடமும் வீபிஷணாழ்வார்களிடமும் ஈடுபட்டார். நம்பெருமாள் லோகசாரங்க மஹாமுனியைக் காட்டிலும் திருப்பாணாழ்வாரிடம் ஈடுபட்டார். திருமலையப்பன் ( ஶ்ரீ வெங்கடாசலபதி) முடிமன்னான தொண்டைமான் சக்கரவர்த்தியைக் காட்டிலும் குயவரான குறும்பறுத்த நம்பியிடம் ஈடுபட்டார். பெரியநம்பி ப்ராஹ்மண ஶ்ரீ வைஷ்ணவர்களுடைய விரோதத்தையும் பொருட்படுத்தாமல் மாறனேரி நம்பிக்கு ப்ரஹ்மமேத ஸ்மஸ்காரம் (ஈமசடங்கை) செய்தருளினார். ஆகையால் ப்ராஹ்மண ஶ்ரீவைஷ்ணவர்கள் இந்தப் பத்து வார்த்தைகளையும் அநுசந்தித்தால் சாத்தாத முதலிகளின் பெருமையை அறிவார்கள்  ஆகையாலே அவர்களிடம் அபசாரம் ஏற்படாது. எம்பெருமான் திருவடிகள் எளிதில் கிட்டும்" - என்று  இராமானுஜர் முதலியாண்டானுக்கு அருளிச்செய்தார்.


அடியார்களின் அடியார்களிடம் அபசாரம் படக்கூடாது என்பது இராமானுஜரின் நிர்வாகத்தில்  மிகமுக்கியமான ஒன்றாக இருந்தது என்பது மேற்கண்ட வார்த்தைகளின் மூலம் தெளிவாக அறியப்படுகிறது. 


மாசி ஆயில்யம் நக்ஷத்திரத்தில் அவதரித்து மல்லர்களின் தலைவனாக இருந்து, இராமானுஜரால் திருத்தி பணிகொண்டு, அரங்கன் மற்றும் ஆசாரியர் இராமானுஜருக்குக் கைங்கரியங்கள் பலசெய்து, பக்தியிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கிய உறங்கா வில்லி தாஸர் திருநாடு அலங்கரித்தார். இராமானுஜரின் கட்டளைப்படி பூம்பல்லக்கில் தாஸரின் பூதவுடலை எழுந்தருளச் செய்தனர். அவரது பூதவுடல் தாங்கிய பூம்பல்லக்கு செல்லும் போது அதை உற்றுநோக்கியவாறு பொன்னாச்சியார் பெரிய திருமொழியின் பாசுரத்தை நினைவு கூர்ந்து, 


"மாரி மாக்கடல் வளை வணர்க்கு இளையவன் வரை புரை திரு மார்பில்

தாரின் ஆசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்த தோர் துணை காணேன்

ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது ஒளியவன் விசும்பு இயங்கும்

தேரும் போயிற்றுத் திசைகளும் மறைந்தன செய்வது ஓன்று அறியேனே" 

                                         – பெரிய திருமொழி 8-5-2


ஊரும் உலகமும் கதிரவனும் திசைகளும் மறைந்தன , செய்வது ஒன்றும் அறியாமல் மூர்ச்சித்து கீழே விழுந்து உயிர் துறந்தார். இருவருடைய உடலும் உயிரும் இணைந்து இருந்தன என்பதற்கு இதுவே சான்றாக அமைந்தது. இருவரையும் ஒரே இடத்தில் ஶ்ரீரங்கத்தில் பள்ளிபடுத்தினர்கள் (அடக்கம் செய்தனர்).


இராமானுஜர் தனது வயதான காலத்தில் ஒவ்வொரு சீடனுக்கும் ஒவ்வொரு கைங்கரியம் என்று நியமித்தார்.பிள்ளை உறங்காவில்லி தாஸர் என்ற சீடனுக்கு மடத்தின் கருவூலம் பாதுகாக்கும் பொறுப்பைக் கொடுத்தார் என்று "ஶ்ரீ ராமானுஜ வைபவம்" என்ற நூலில் கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.


"கோமடத்துச் சிறியாச்சான் கலசப்பானை குலவு திருவடிநிலைகள் கொண்டம் மேலோர் 

போமிடத்துப் பின்செல்வன் போதமிக்க பொருவருஞ்சீர் உறங்காவில்லி தாதர்

தாமடத்தில் கருவூலம் நோக்கி வாழ்வர் தவமிக்க அம்மங்கி தக்க நீதிப்

பாமடந்தை பணிந்தேத்தெம்பெருமானார்க்குப் பாலமுது காய்ச் சுவனற் பரிவால் நாளும் 


பிள்ளை உறங்காவில்லி தாஸர், அவரது தர்மபத்னி பொன்னாச்சியாரின் வாழ்க்கை என்பது ஶ்ரீவைஷ்ணவ சம்பிதாயத்தில் பாகவத சேஷத்வ பாரதந்த்ர்யங்கள் லக்ஷணத்துக்கு இலக்கணமாகத் திகழ்ந்தது.


உறங்காவில்லி தாஸர் திருவடிகளே சரணம் 

எம்பெருமானார் திருவடிகளே சரணம் 


மகர சடகோபன் 

தென்திருப்பேரை 


 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் (அடியேன் அனுபவம் இன்று)

எல்லைச்சாமி

கம்பனின் அம்பறாத்தூணி