தமிழ் காப்பியங்கள் போற்றும் சிறை இருந்தவள் ஏற்றம்
இராமாயணத்தில் சீதையை இராமன் தீக்குளிக்கச் செய்து துன்புறுத்தினான். மேலும் கற்பகாலத்தில் அவளை மீண்டும் வனவாசம் அனுப்பித் துன்புறுத்தினான் என்ற குற்றச்சாற்றை இராமன் மேல் சுமத்தி , இராமன் ஒரு தீயவன் என்று தமிழகத்தில் சுற்றிவிடப்படுகிறது. பெண்ணை அடிமையாக நடத்தினான் என்ற குற்றச் சாற்றையும், இராமாயணம் தீயநூல் என்ற புரளியையும் அள்ளி வீசுகிறது. இதற்கு மாறாகப் பெண் பெருமை பேசிய மணிமேகலை சிலப்பதிகாரம் குண்டலகேசி நூல்கள் சிறந்தவை என்ற வாதம் போலித் தமிழர்களால் வைக்கப்படுகிறது. மேலே குறிப்பிட்ட ஐம்பெருங்காப்பிய நூல்கள் சிறந்தவை , அவை போற்றப்படக் கூடிய நூல்கள் என்பதில் ஒரு சிறுதுளி சந்தேகமும் இருக்கமுடியாது. அங்கே பெண்ணின் பெருமை பேசப்படுகிறது என்பதும் உண்மைதான். இராமாயணம் சிறை இருந்தவள் ஏற்றம் என்று சீதையின் ஏற்றத்தை கூற வந்த நூல் என்றே தமிழகம் கொண்டாடுகிறது. பிள்ளைலோகாசாரியார் தனது ஶ்ரீவசனபூஷணம் என்ற நூலில் விளக்கமாக அருளிச் செய்துள்ளார். இராமாயணம் சீதாதேவி என்ற பெண்ணின் ஏற்றத்தை ,சேதன ரூபத்தில் சொல்லவந்த நூல். "இதிஹாச ஸ்ரேஷ்டமான ஶ்ரீ இராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது , மகாப