இடுகைகள்

ஆகஸ்ட், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உப்பும் சுதந்திரமும்

படம்
  இன்று சுதந்திர தினம் .... உற்சாகம் ....... சுதந்திரக் காற்று ....... பொருள்களின் மீது வரிகள் விதிக்கப்பட்டாலும் .......ஒரு பக்கம் விலைகள் அதிகம் இருந்தாலும்....... ஒரு பக்கம் சம்பளம் உயர்ந்து காணப்படுகிறது என்பதும் உண்மை...... பொருளாதார சுழற்சியில் இந்த விலையேற்றம் தவிர்க்க முடியாத ஒன்று ......... ஆனந்தமான சுதந்திரக் காற்று. சுதந்திரம் எங்கள் அடிப்படை உரிமை......... சுதந்திரம் என்பது அரசை எதிர்த்து கேள்வி கேட்கும் அடிப்படை உரிமை ....... பேச்சு உரிமை ...... ஆட்சியை தேர்ந்தெடுக்கவும் மாற்றவும் உரிமை ......... கருத்து உரிமை ....... எழுத்து உரிமை ..... அனைத்து உரிமைகளையும் அனுபவிக்கும் உரிமை ......, உரிமை உணர்வுகளுடன் உள்கலந்த ஒன்று....... ஒரு மனிதனுக்கு எல்லாம் இருந்து சுதந்திரம் மட்டும் இல்லை என்று வரும்போது அவனுடைய மனநிலை எவ்வாறாக இருக்கும் ....... இருந்தும் இல்லாதவன் போல் மனநிலை குன்றி காணப்படுவான். இதைச் சொல்லால் விவரிக்கமுடியாது ..… அனுபவத்தில் உணரக்கூடியது சுதந்திரம்.. "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்"........ தாகம் தணிந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன..... தாகம் பல வகையில் த

திருநாமங்கள் காட்டும் தலைமைப் பண்புகள் - கடல்வண்ணன்

படம்
  கடல் வண்ணன் திருநாமம்: நம்மாழ்வார் திருவாய்மொழியில் தென்திருப்பேரை எம்பெருமானை " கண்டதுவே கொண்டு எல்லோரும் கூடிக் கார்க் கடல்வண்ணனோடு என் திறத்துக் கொண்டு " என்று மங்களாசாசனம் செய்துள்ளார். 1. கடலின் ஒரு குணம் புல் , துரும்பு போன்ற பதர்களை அலைமேல் அலை வந்து வெளியே தள்ளிவிடும். முத்து, ரத்தினம் போன்றவற்றை வெளியே தள்ளாமல் உள் வாங்கிக் கொண்டிருக்கும். அதுபோல் தலைவன் தீயவற்றைப் பதர்கள் போல் நீக்கி, நல்லவற்றை முத்து, ரத்தினம் போல் உள்வாங்கி செயல் செய்து  இருக்கவேண்டும். 2. கடலில் சிறு மீன் முதல் திமிங்கிலம் வரை அடைக்கலம். கிளிஞ்சல் முதல் ரத்னம் வரை அடைக்கலம். அதேபோல் தலைவன் என்பவன் சிறியவர் பெரியவர், இருப்பவர் இல்லாதவர், ஏழை பணக்காரர் என்ற அனைத்து மக்களின் பிரதிநிதியாக இருக்கவேண்டும். 3. கடலிருந்து நீரை முகந்து மேகம் மழை பெய்கிறது. ஆனால் வித்தியாசம் பாராமல் எல்லா இடத்திலும் பெய்கிறது. இல்லாத இடத்தில் அதிகம் பெய்தால் நன்மை பயக்கும். இருக்கும் இடத்தில் பெய்தால் பலன் குறையும். கடலில் பெய்தால் உபயோகம் இல்லை. அதுபோல் தலைவன் என்பவன் தான் பெற்ற கல்வி, அனுபவம் முதலியவற்றைச் சரிவரப் பகிர

திருநாமங்கள் காட்டும் தலைமைப் பண்புகள் - மணிவண்ணன்

படம்
  மணி வண்ணன் திருநாமம்: நம்மாழ்வார் திருவாய்மொழி 7-3-2 ல் தென்திருப்பேரை எம்பெருமானை “ “ தேன் மொய்த்த பூம்பொழில் தண்பணை சூழ்* தெந்திருப்பேரெயில் வீற்றிருந்த* வானப்பிரான் மணிவண்ணன் கண்ணன்* செங்கனிவாயின் திறத்ததுவே” என்று மங்களாசாசனம் செய்துள்ளார். மணிவண்ணன் திருநாமம் காட்டும் தலைமைப் பண்புகள் 1. மணி போன்ற ரத்தினங்கள் விலை மதிப்பு உயர்ந்து இருந்தாலும், புடவைத் தலைப்பில் முடிந்து ஆளலாம்படி அடங்கியிருக்கும்.அதே போல் தலைவன் என்பவன் மதிப்பு புகழ் பெற்றிருந்தாலும் மக்கள் தொடர்புடையவர் என்ற எளிமையைப் பெற்றிருக்க வேண்டும். ( யசோதை உரலில் கயிறு கொண்டு கட்ட, கட்டுண்டு நின்றவன் என்பதன் மூலம் அவன் எளிமை உணரப்படுகிறது) 2. ரத்தினம் என்பது பார்ப்பதற்குப் பெருமிதத்தைத் தரும். அது பிறந்த இடமான மலையும் கடலும் பெருமிதத்துடன் இயற்கையில் தோன்றுபவையாக இருக்கின்றன. அந்த கடலும் மலைகளும் தன்னை அழித்துக் கொண்டு ரத்தினத்தை வெளிப்படுத்துகின்றன மக்களின் மகிழ்ச்சிக்காக என்பதுதான் உண்மை. அதே போல் தலைவன் என்பவனுக்கு அவனுடைய செயலால் மக்கள் மனதிலும் , அவன் மனதிலும்  பெருமிதம் தோன்றுகிறது. தலைவனைப் பெற்ற தாய் தந்தையர் தல

திருநாமங்கள் காட்டும் தலைமைப் பண்புகள் - முகில் வண்ணன்

படம்
  எம்பெருமான் திருநாமங்கள் காட்டும் தலைமைப் பண்புகள்.‌ காஞ்சி மஹா பெரியவர் ஶ்ரீ உ.வே. பிரதிவாத அண்ணங்காரச்சாரியார் ஸ்வாமி எழுதிய “உள்ளுறை பொருள் விளக்கு” என்ற நூல்  1958 ஆம் ஆண்டு வெளிவந்த நூலில், ஆழ்வார்கள் உபயோகப்படுத்திய  எம்பெருமானின் உவமை திருநாமங்களான கடல் வண்ணன் , முகில் வண்ணன் போன்ற திருநாமங்கள் பெயர் வருவதற்கான காரணத்தை எம்பெருமானின் குணத்தை மேற்கோள் காட்டி ஒப்பிட்டு பெயர் பொருத்தத்தை அழகாக விளக்கியுள்ளார். இந்தக் குணங்கள் நிர்வாகத் தலைமைக்கும் அவசியம் என்பதனால்  “எம்பெருமான் திருநாமங்கள் காட்டும் தலைமைப் பண்புகள்” என்ற தலைப்பில் எழுதலாம் என்றூ நினைத்து, அதில் ஒன்றான கடல் வண்ணன் என்ற திருநாமம் காட்டிய தலைமைப் பண்புகளை முதலில் எழுதினேன்.  முகில் வண்ணன்( மேகவண்ணன்)  திருநாமம் :   தென்திருப்பேரை எம்பெருமானை நம்மாழ்வார் “ நிகரில் முகில் வண்ணன் நேமியான் என் நெஞ்சம் கவர்ந்தான்” என்று மங்களாசாசனம் செய்துள்ளார். அந்த திருநாமம் காட்டும் தலைமைப் பண்புகள் சிலவற்றைப் பார்ப்போம்.  1. மேகம் கடலிருந்து நீரை எடுத்து நல்ல நீராக மாற்றி பரரபட்சமின்றி எல்லா இடத்திலும் பெய்யும். அதேபோல் தலைவன்