பூர்ணம் - 9
தொடர் ஓட்ட நிலையில் நின்று நிகழ்கால வாழ்க்கையை உணர்ந்து செயல்படும்போது ஏற்படும் ஆனந்தம் என்பது மனமகிழ்ச்சியை ஏற்படுத்தலாம் என்பதுதான் உண்மை. மகிழ்ச்சி என்பது ஒவ்வொரு நொடியிலும் அனுபவிக்க வேண்டிய உணர்வு. அதை அனுபவிப்பதும் இழப்பதும் என்பது நம் கையில்தான் இருக்கிறது. இதனைக் கூறும்போது எனது மனதில் செல்வது " சித்தார்த்தன்" என்ற புத்தகம். இதை எழுதியவர் ஜெர்மனிய நாட்டைச் சேர்ந்த ஹெர்மேன் ஹெசி. அவருக்கு இந்தப் புத்தகம் எழுத ஏற்பட்ட ஞானம் என்பது பாரத மண் கொடுத்த கொடை. ஞானப் பூமியில் கர்ம பூமியில் வாழ்ந்த அனுபவம் என்பது அவருக்கு இந்தப் புத்தகத்தை எழுத ஊக்கம் அளித்துள்ளது என்பது உண்மை. இந்தப் புத்தகத்தில் வரும் கதாநாயகன் சித்தார்த்தன் அவனது அப்பாவிடம் , அவனது உற்ற நண்பன் கோவிந்தனுடன் வேதங்களைக் கற்று, அதன் மூலம் ஓம் என்ற பிரணவ மந்திர உச்சரிப்பின் முலம் தியானமிருந்து ஆத்ம ஞானத் தேடலைக் காண முயல்கிறான். ஆத்ம ஞானத் தேடல் என்பது அவனுடைய இலக்காக இருக்க , பிரணவ மந்திர தியானத்தின் மூலம் ஆத்ம ஞானம் கிடைத்தாலும் மன நிறைவு இல்லை. அப்பொழுது முற்றும் துறந்த சமணத் துறவ...