இடுகைகள்

பிப்ரவரி, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிரயாக்ராஜ் யாத்திரை -3 (அயோத்தியா, நைமிசாரணியம்)

படம்
             வீணை சதுக்கம்                          (அயோத்தியா) வாரணாசி மீண்டும், இந்த தடவை ரயில் நிலையம் பக்கத்தில் தங்கும் அறை எடுத்தேன். அனைத்து சுமைகளையும் தங்கும் அறையில் வைத்துவிட்டு, நீராடி நடக்க ஆரம்பித்தேன். கோயில் வரை நடந்து சென்று அன்னபூரணி , விசாலாட்சி அம்மனைத் தரிசித்துவிட்டுப் புறப்படலாம் என்று நினைக்கும்போது, ஏன் ஒரு முறை ஈஸ்வரனையும் தரிசிக்கலாம் என்று தோன்றியது. இரண்டாவது முறை வெகு விரைவில் தரிசனம் கிடைத்தது. அது அவனது அருளே என்று சொல்லும் அளவுக்கு இருந்தது. அன்னபூரணி அம்மனை தரிசித்து, அன்னபூரணி கோயிலில் இரவு சிற்றுண்டி முடிந்துவிட்டதால், மீண்டும் நடை தங்கும் இடத்தை நோக்கி விரைந்தது.  வரிசையில் செல்லும் பகுதி மறுநாள் காலை எழுந்து அயோத்தியா செல்லும் ரயிலைப் பிடிக்கச் சென்றேன்.‌ ஆனால் வாரணாசி ரயில் நிலையத்தில் ஏற்பாடு என்பது அவ்வளவு சரியாக இல்லை. மக்கள் நெருக்கடியில் ஒரு வழியாக ரயிலில் ஏறி அயோத்தியா மூன்று மணி நேரத் தாமதத்துடன் வந்தேன். ரயில் ந...

பிராயக்ராஜ் யாத்திரை - 2 (திரிவேணி சங்கமம்)

படம்
வாரணாசியிலிருந்து 20 கி.மீ தொலைவில் சென்று நான்கு சக்கர வாகனத்தில் ஏறி திரிவேணி சங்கமம் நோக்கி பயணம் தொடங்கியது. பிரதான சாலைகள் அங்கங்கே மூடப்பட்ட காரணத்தினால், கிராமம் கிராமமாகப் புகுந்து பிரயாக்ராஜ் வந்தது வாகனம். அதற்கு மேல் வாகனம் செல்ல முடியவில்லை. திரிவேணி சங்கமம் செக்டார் 7 செல்வதற்கு இன்னும் 14 கி.மீ. இருக்கிறது என்று சொன்னார்கள். சாலை முழுவதும் மக்கள். மக்கள் சுமைகளைத் தூக்கிக் கொண்டும், குழந்தைகளைக் கையில் பிடித்துக்கொண்டும் , தோளில் தூக்கிக் கொண்டும் மக்கள் ஊர்ந்து செல்வதைக்  கவனித்தேன். ஒரு குறையும் கூறாமல் அமைதியாக நடந்துக் கொண்டிருக்கிறார்கள் மக்கள்.  மக்கள்  கயிற்றைப் பிடித்துக் கொண்டு , இரண்டு கயிற்றுக்கு இடையில் குழந்தைகளையும் பெரியவர்களையும் வைத்துக் கொண்டு நகர்வது என்பது மக்கள் அவர்களால் அவர்களுக்கு அமைத்துக் கொள்ளும் ஒரு பாதுகாப்பு வளைவு.  மற்றொரு அமைப்பு என்பது ஒரு கயிற்றின் இரண்டு பக்கங்களிலும் பிடித்துக்கொண்டு நகரும் கூட்டம், அதுவும் மக்கள் அவர்களால் அவர்களுக்கு அமைத்துக் கொள்ளும் ஒரு பாதுகாப...