இடுகைகள்

ஆகஸ்ட், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஈரம் - 2

படம்
"நெஞ்சில் ஈரம் இருந்தால் மானுடம் சிறக்கும்" என்று ஈரம் என்ற கட்டுரையை முடித்தோம். ஈரம் மண்ணில் இல்லை என்றும் தோன்றும் அளவுக்கு , ஈரம் இல்லாத மண் வறண்ட நிலமாக , நிலம் பிளவுண்டு, வெடிப்புடன் கோரமான முகத்துடன் நிலமகள் உள்ளாள் என்பதனை மண்ணில் வாழும் மைந்தர்கள் நிரூபித்து, அறம் இல்லை அன்பு இல்லை, பொய்யா மொழி புலவனின் வார்த்தை பொய் என்று நிரூபிக்கும் கலி காலம் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு, கலியே நடுங்கும் அளவுக்கு, காலத்தால் காரியம் நடந்து நிறைவேறியுள்ளது. "பொலிக பொலிக பொலிக!போயிற்று வல் உயிர்ச் சாபம், நலியும் நரகமும் நைந்த, நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை கலியும் கெடும் கண்டுகொண்மின்"  கலியும் கெடும் நரகமும் நைந்து நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை என்று நம்மாழ்வார் அருளிய வாக்கு பொய்யானது. நமன் உருவத்தில் நரகர்கள் வந்து நாலுலகம் வெட்கி தலை குனிய இருக்கும் செயலை , சுதந்திரமாகக் காற்றை உள்வாங்கும் வேலையில் சுதந்திரமாகக் காற்றை உள்ளிருந்து வாங்கியுள்ளார்கள்.  இந்த செயல் என்பது, என்ன காரணத்தினால் ஆனாலும், இது ஒரு அறங்கெட்ட செயல். இங்கே சிலர் மனிதனின் உளவியல

ஈரம்

படம்
அன்பின் வெளிப்பாடு என்பது விருந்தோம்பல், அதனை வள்ளுவ பெருந்தகை விருந்தோம்பல் என்ற அதிகாரத்தில் வைத்துக் கூறும் போது,  "மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து" விருந்தோம்பல் அன்பின் வெளிப்பாடு. அதற்கு மூன்று இன்றியமையாதது, அதாவது இன்முகம், இன்சொல், வழி நன்று ஆற்றல் ( விருந்து) என்று பரிமேலழகர் உரை காண்கிறார்.  தூரத்தில் வரும்போது இன்முகம் காட்டி, அருகாமையில் வந்த பிறகு இன்சொல் பேசி விருந்து செய்வது என்பது இங்கே பரிமேலழகரால் காட்டப்பட்டது.  இனியவை கூறல் என்ற அதிகாரத்தில் வள்ளுவ பெருந்தகை, அறம் என்பன யாது என்று கூறும் போது,  "முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம்" இன்முகம் , இன்சொல் என்பது அறத்தின் பண்புகள். இந்த இரண்டையும் மனிதன் தன்னகத்தே வைத்துள்ளான். பொருளாகக் கொடுப்பது என்பது பொருள் வயத்தில் உள்ளது, அது சில சமயங்களில் இருக்கும் சில சமயங்களில் இருக்காது, ஆனால் இந்த இரண்டு பண்புகளும் உயிர் உள்ளவரை எப்பொழுதும் தன்வயத்தில் இருப்பதனால் இதன் சிறப்பு இந்தக் குறளில் கூறப்பட்டது. இன்முகம் காட்டுவதில் பெரிய அங்கம்