இடுகைகள்

ஜூன், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பரமசாமி ( வழக்கொழிந்த தமிழ்ச்சொல்)

படம்
அம்பறாத்தூணி என்ற வார்த்தை உபயோகம் எனது நெஞ்சத்திற்கு நெருக்கமானதை உணர்ந்தேன். நாஞ்சில் நாடன் ஐயா அவர்கள் 18.03.2022 அன்று "கம்பன் நூல்களை வெளியிடுங்கள்" என்ற ஒரு காணொளியை அனுப்பியிருந்தார். அந்த காணொளியில் யானைக்குத் தமிழில் பல சொற்கள் இருக்கின்றன என்று குறிப்பிட்டு, சில சொற்களையும் குறிப்பிட்டு, இதுவெல்லாம் உபயோகப்படுத்தவில்லையென்றால் அழிந்துவிடும், காலப்போக்கில் யானை என்ற ஒற்றைச் சொல் மட்டுமே தங்கும் என்றும், தமிழனுக்கு அந்த ஒரு சொல் மட்டுமே போதும் என்ற நிலையில் உள்ளதையும் வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார்.  அப்பொழுது குழைக்காதர் பாமாலையிலிருந்து ஆசிரியர் நாராயண தீக்ஷிதர் குறிப்பிட்டிருந்த யானையின் மாற்றுச் சொல்லைப் பாடலுடன் குறிப்பிட்டிருந்தேன். கைம்மா, நால்வாய் என்று ஆழ்வார்கள் குறிப்பிட்டு இருந்ததையும் தெரிவித்து இருந்தேன். அவருக்குத் தெரியாது இல்லை, இருந்தாலும் நான் அறிந்தவற்றைப் பகிர்ந்து இருந்தேன்.  அதே போல் பரம் என்ற கட்டுரையில் பரமசாமி ( The Supreme Being) என்றால் கடவுள் என்ற அர்த்தத்தில் குறிப்பிட்டிருந்தார் ஐயா நாஞ்சில் அவர்கள்.  அப்பொழுது அடி

கம்பனின் அம்பறாத்தூணி

படம்
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கலைமாமணி நாஞ்சில் நாடன் அவர்களை , அவரது கோயம்புத்தூர் இல்லத்தில் சந்தித்தேன். பேசிக் கொண்டிருந்த கால அளவு (11/2 மணி ) என்பது மிகவும் குறைவு.  அந்த குறைந்த நேரத்தில் கம்பனின் சொல் என்பது தமிழுக்குக் கிடைத்த மாபெரும் கொடை. கம்பன் பிறந்தது என்பது தமிழுக்கும் தமிழகத்துக்கும் பெருமை என்றால் மிகையாகாது. கம்பனின் நாவில் உருவாகிய சொற்கள் என்பது கடவுளின் பூரண அருளினால் மட்டுமே என்றும் பல செய்திகளைத் தந்த வண்ணம் இருந்தார்.  தமிழ்க்கடலை சந்தித்த ஒரு மகிழ்ச்சி எனது மனதில் ஓடியது. அடியேனது சமீபத்திய படைப்பான மூன்று புத்தகங்களை அவரது பார்வைக்குக் கொடுத்தேன். பிரியும் நேரத்தில் அவர் எழுதிய "அம்பறாத்தூணி" "சங்கிலிப்பூதத்தான்" என்ற இரண்டு புத்தகங்களை வழங்கினார்.  அதில் கம்பனின் அம்பறாத்தூணி என்ற புத்தகம் அடியேனை மிகவும் கவர்ந்தது.‌ கடல் வற்றினாலும் வற்றும் ஆனால் இராமனின் கணைப்புட்டிலிருந்து கணைகள் வற்றாது. அதுபோல் கம்பனின் அம்பறாத்தூணியில் சொற்கள் வற்றாது.  அம்பு + அறாத்+ தூணி என்று பெயர் வைத்தது என்பது மிகவும் அழகாகவும் அருமையாகவு