மக்களின் தலைவன்
பாலில் சர்க்கரை உட்கலந்து, கலந்த பிறகு சர்க்கரையைப் பிரிக்கமுடியாது. பால் இப்பொழுது சர்க்கரை கலந்த பால். பாலின் மதிப்புக் கூட்டித் தித்திக்கும் பால், சுவை மிகுந்த பாலாகக் கருதப்படுகிறது. பாத்திரத்தின் கடைசி துளிப் பால் வரை அதன் தித்திக்கும் தன்மை இருக்கும். மக்கள் தலைவன் என்பவன் மக்களிடம் உட்கலந்து, பிரிக்கமுடியாத அளவுக்கு உட்கலந்து ,அவர்களை ஊக்குவித்து, அவர்களின் மதிப்பை(Value)அதிகரித்து, அவர்களுக்கு எக்காலத்திலும் துணைநிற்பதுதான் அழகு. மக்களின் கடைசி விளிம்பு வரை மதிப்பைக் கூட்டுவதுதான் தலைவனின் தலையாய கடமையாகும். நமது பாரதப் பிரதமர் மோடிஜி அவர்கள் மக்களுடன் கலந்து , ஊக்குவிப்பதில் தலைசிறந்தவர். ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்ட அனைத்து வீரர்களையும், வீராங்கனைகளையும் தனது டிவிட்டர் பக்கத்தில் செய்திகள் மூலம் ஊக்குவித்தார். அவர்கள் நாடு திரும்பியவுடன் அவர்களை டில்லியில் சந்தித்து அனுபவங்களைக் கேட்டு உரையாடினார். அதன் விளைவு என்பது இந்திய அணிக்கு ஆசிய விளையாட்டில் முதன்முறையாக அதிக பதக்கங்களை வெல்லமுடிந்தது. கிரிக்கெட் உலகக் கோப்