இடுகைகள்

அக்டோபர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அண்ணல் இராமானுஜர் கண்ட புரட்சி -12

படம்
ஶ்ரீ வைஷ்ணவத்தில் பகவத் கைங்கர்யம் செய்வதில் சாதிகள் ஒரு தடை இல்லை என்றும் , பகவான் விஷ்ணுவை மனதார ஏற்றுக்கொண்டு , அவனிடம் சரணடைந்து சரணாகதனாக வாழவேண்டும் என்றும் , பாகவதோத்தமர்களை மனதளவில்கூட அபச்சாரம் செய்யாமல் வாழவேண்டும் என்ற உன்னதமான நெறியைப் பரப்பியவர் நம்மாழ்வார், அவரைப் பின் தொடர்ந்து ஆசாரியர்கள், அந்த ஆசார்ய பரம்பரைக்கு ரத்தினமாக விளங்கியவர் அண்ணல் இராமானுஜர்.  இராமானுஜர் காலத்திற்குப் பின்னும் இந்த உயர்ந்த கொள்கையான "எல்லை நிலையான பாகவத கைங்கர்யம்" என்ற நிலையைச் சீராகப் பின்பற்றிப் போற்றிப் பாதுகாத்து வந்தனர்கள் என்பதற்கு  பின்பழகராம் பெருமாள் ஜீயர் அருளிச் செய்த "வார்த்தா மாலை" என்பது சிறந்த உதாரணமாகும்.  "பின்பழகராம் பெருமாள் சீயர் பெரும் திவத்தில் அன்பு அதுவும் அற்று மிக்க வாசையினால்-நம்பிள்ளைக்கு ஆன அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே ஊனமற எப்பொழுதும் ஓர்"                                     - உபதேசரத்தினமாலை 66 மணவாள மாமுனிகள் அருளிச்செய்த உபதேசரத்தினமாலையில் பின்பழகராம் பெருமாள் ஜீயர் நம்பிள்ளையின் சிஷ்யர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இராமானு

குயில்

படம்
குயில் என்பது அழகான குரல் வளம் கொண்ட பறவை. அதன் குரல் அவ்வளவு இனிமையானது. அதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அதுவும் ஆண்குயில் மற்றும் பெண்குயில் பேசுவதைக் கேட்பது இன்னும் இனிமை. அளவு அறிந்து பேசும் பறவையினம்.  ஒவ்வொரு படைப்புக்கும் பின்னால் ஒரு அர்த்தம் இருக்கும். குயில் என்பது படைக்கப்பட்ட நோக்கம், அதிலிருந்து சில பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம். ஆனால் குயில் ஒரு சோம்பேறி பறவை என்பதை மறந்து விடக்கூடாது. அதன் செயல்களை உற்று நோக்கினால், அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இருக்கின்றன என்பது தெரியவருகிறது. தான் வசிப்பதற்கும், முட்டையிடுவதற்கும், தன் குஞ்சுகளைப் பாதுகாப்பதற்காகவும் ஒரு இடத்தைக் கட்டுவது இல்லை. ஆண் பெண் குயில் இரண்டும் சேர்ந்து செய்யலாம், அதைச் செய்யாமல், பக்கத்தில் இருக்கும் காக்கை கூட்டைத் தேடி அலையும். தான் வாழ்வதற்கு ஒரு இடத்தை அமைத்துக் கொள்ள முடியாத அளவுக்குச் சோம்பல் தன்மை படைத்தவை. தன்னுடைய முட்டைகளை தான் அடைக்காத்துப் பாதுகாத்து மற்றும் குஞ்சுகளை வளர்ப்பதில்லை. குஞ்சுகள் இந்த உலகத்திற்கு வரும் போதே மாற்று தாயான காகத்தின் பாதுகாப்பில் வளர்கிறது , காக