முள்ளம்பன்றி
சமீபத்தில் ஒரு புத்தகம் படித்தேன். அதில் ஒரு கதை முள்ளம் பன்றியிடமிருந்துக் கற்றுக்கொள்ள வேண்டிய மேலாண்மைப் பாடம் ஒன்றுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. முள்ளம்பன்றி தனியாக இருக்கும்போது அதன் முட்கள் அதற்குப் பலமாக அமைகின்றன.எதிரி காட்டு விலங்கினங்கள் முள்ளம்பன்றியைத் தாக்கும்போது, பின்பக்கமாகச் சென்று பின்பக்கம் முட்களால் எதிரி விலங்கினங்களைத் தாக்குகின்றன. பின்பக்க முட்கள் அதற்குப் பலமாக அமைந்துள்ளது. கடுங்குளிர் காலத்தில் முள்ளம்பன்றிகள் குளிர் தாங்கமுடியாமல் இறந்துவிடும் சூழ்நிலை ஏற்படுவது வழக்கம். அந்த சூழ்நிலையைத் தவிர்க்கும் பொருட்டு முள்ளம்பன்றிகள் அனைத்தும் நெருங்கி வந்து ஒன்றோடு ஒன்றாக ஒட்டிநின்று வெப்பத்தை ஏற்படுத்தி கடுங்குளிரைத் தாங்கும் சூழ்நிலையைத் தங்களுக்கு தாங்களே முன்வந்து உருவாக்கிக் கொள்கின்றன. அப்பொழுது அதன் பலமாக அமைந்த முட்கள், ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளும் போது வலிகளை ஏற்படுத்துகிறது. முள்ளம்பன்றிகள் கடுங்குளிர் காலத்தில் உயிர்வாழ்வதற்காக, தங்கள் முட்கள் ஏற்படுத்தும் வலிகளைப் பொறுத்துக் கொண்டு வாழ்கின்றன. இங்கே குறிக்கோள் என்பது உயிர் வ