அண்ணல் இராமானுஜர் கண்ட புரட்சி -5
திருக்சச்சி நம்பி மாசி மிருகசீர்ஷம் நட்சத்திரத்தில் வைசிய குலத்தில் சென்னை அருகாமையில் இருக்கும் பூவிருந்தவல்லி என்ற ஊரில் அவதரித்தார். அவரது இயற்பெயர் கஜேந்திரன். ஆளவந்தாரின் சிஷ்யராக வாழ்ந்து வந்தார். திருவாலவட்டம் ( விசிறி வீசும்) கைங்கர்யம் செய்வதில் பேரின்பம் கொண்டவர். அவர் அவதரித்த ஊருக்கு அருகாமையில் இருக்கும் பெருமாள் கோயில் என்று சம்பிரதாயத்தில் அழைக்கப்படும் காஞ்சியில் அக்னிக் குண்டத்தில் தோன்றிய தேவாதி ராஜனுக்குத் தினம் திருவாலவட்டம் ( விசிறி வீசும்) கைங்கரியம் செய்து வந்தார். இராமானுஜர் யாதவப்பிரகாசர் என்ற ஆசாரியரிடம் வேத, வேதாந்த பாடங்களைப் பயின்று வந்தார். காஞ்சி கரியமாணிக்க பெருமாள் சந்நிதியில் யாதவப்பிரகாசர் அன்று அவரது சீடர்களுக்கு வேதம் கற்பித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது ஆளவந்தார் காஞ்சிக்கு எழுந்தருளியிருந்தார். ஆளவந்தார் திருக்கச்சி நம்பியிடம் இளையபெருமாள் (இராமானுஜரின் இயற்பெயர்) இந்த கோஷ்டியில் எங்குள்ளார் என்று வினவ , திருக்கச்சி நம்பி கோஷ்டியில் வெண்மை நிறத்தில் இருக்கும் இளையாழ்வாரைச் சுட்டிக் காட்டினார். ஆளவந்தார் அங்கிருந்தே "