அண்ணல் இராமானுஜர் கண்ட புரட்சி - 3
பெரிய நம்பி வாழித்திருநாமம் அம்புவியில் பதின்மர்கலை ஆய்ந்துரைப்போன் வாழியே ஆளவந்தார் தாளிணையை அடைந்துய்ந்தோன் வாழியே உம்பர் தொழும் அரங்கேசர்க்கு உகப்புடையோன் வாழியே ஓங்கு தனுக் கேட்டைதனில் உதித்த பிரான் வாழியே வம்பவிழ்தார் வரதருரை வாழி செய்தான் வாழியே மாறனேர் நம்பிக்கு வாழ்வளித்தான் வாழியே எம்பெருமானார் முனிவர்க்கு இதமுரைத்தான் வாழியே எழில் பெரிய நம்பி சரண் இனிதூழி வாழியே ஆசாரிய பரம்பரையில் இராமானுஜருக்கு முன், திருவரங்கத்தை நிர்வாகம் செய்து வந்தவர் ஆளவந்தார் என்ற ஆசாரியன். ஆளவந்தார் இராமானுஜரைத் திருத்திப் பணிகொள்ள பஞ்ச ஆசாரியர்களை நியமித்தார் என்று பார்த்தோம். இராமானுஜருக்குப் பஞ்ச சம்ஸ்காரம் செய்வித்த நேரடி ஆசாரியன் பெரிய நம்பி ஸ்வாமிகள். அவர்களுடன் சஹமாணவராக இருந்து சாஸ்திரங்களை கற்றவர் மாறனேர் நம்பி. இவர் மிகவும் தாழ்த்தப்பட்ட இனத்தார் என்று சொல்லப்படும் குலத்தில் அவதரித்து, உயர்ந்த மனிதராகச் சாஸ்திரங்களை கற்று நடைமுறையில் அவ்வாறே வாழ்ந்து வந்தவர். இவர் பாண்டிய நாட்டில் புராந்தகம் என்ற ஊரில், ஆனி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவர் ஆளவந்தாரை குருவாக ஏற்றுக் கொண்டு