பூர்ணம் -19 ( சரீர ஆத்ம பாவம்)
நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத்: | உபயோரபி த்ருஷ்டோ அந்தஸ்த்வநயோஸ் தத்வ தர்சிபி:||. 2-16 அஸத் - இல்லாததற்கு, பாவ - இருப்பு , ந வித்யதே - இல்லை , கிடையாது, ஸத் - இருப்பதற்கும், அப் பாவ - இல்லாமை , வித்யதே - உண்டு , தத்வதர்சிபி- தத்துவத்தை அறிந்தவர்கள், அனயோ உபயோ- இவ்விரண்டின், அந்தஸ் - முடிவு , த்ருஷ்டோ- காணப்படுகிறது. இல்லாத பொருள்களுக்கு இருத்தல் என்பதில்லை ; இருக்கும் பொருள்களுக்கு இல்லாமை என்பதில்லை; இவ்விரண்டுமே ஞானிகளின் முடிவான கருத்தாகும். இதில் அஸத் மற்றும் ஸத் என்ற இரண்டு பொருள்களை வைத்து விசாரிக்கிறார்கள் தத்வ தரிசிகள். வேதாந்த கருத்துகளுக்குத் தத்துவ அர்த்தமாக உரை எழுதிய தத்துவத் தரிசிகள் மூவரும் பாரதத்தில் தெற்கே தோன்றினார்கள். மூவரும் மூன்று நூல்களைக் கொண்டு தங்களது தத்துவங்களை நிறுவினார்கள். உபநிஷத்துக்கள், பகவத் கீதை மற்றும் பிரம்ம சூத்திரம் என்ற மூன்று வேதாந்த கருத்து நூலுக்கு உரை எழுதினார்கள். பகவத் ஆதிசங்கரர் அத்வைதம் என்ற தத்துவத்தையும், பகவத் இராமானுஜர் விசிஷ்டாத்வைதம் என்ற தத்துவத்தையும், பகவத் மத்வாச்சாரியார் துவைதம் என்ற தத்துவத்தையும் அவர்களது...