பூர்ணம் - 17
"யதா தீபோ நிவாதஸ்த்தோ நேங்கதே ஸோப மா ஸ்ம்ருதா| யோகிநோ யதசித்தஸ்ய யுஞ்ஜதோ யோகம் ஆத்மந:||" 6-19 தீபோ- விளக்கு , நிவாதஸ்த்தோ- காற்றில்லாத இடம், நேங்கதே- அசையாமல் யதசித்தஸ்ய- மனதைக் கட்டுப்படுத்தினவன் யுஞ்ஜதோ- தொடர்ந்து விடாமல் யோகம்- த்யானம் காற்றில்லாத இடத்தில் ஒரு விளக்கின் தழல், எப்படி ஆடாமல் அசையாமல் நின்று ஒளிருமோ, அதைப்போல மற்ற விஷயங்களினால் மனம் கலக்காமல் அசையாமல் ஆத்ம சிந்தனத்தில் நின்று பிரகாசிப்பவன் சிறந்த ஆத்ம யோகியாகிறான் என்று விளக்குகிறான். தியானத்தின் போது, கண்களைப் பாதி மூடியும் பாதித் திறந்தும் வைத்த நிலையில் மூக்கு நுனியைப் பார்க்க வேண்டும். இப்படிச் செய்வது என்பது முதலில் கடினம், தொடர்ந்து பயிற்சி செய்து பழகும்போது எளிதாக மாறும். கூர்மையான கவனத்திறனை அதாவது குவியல் திறனை (Focus) அதிகரிக்கும். அப்படிச் செய்வதன் மூலம் உங்கள் கவனம் (Focus) சிதறாமல் ஒருநிலைப் படுத்தியிருக்கும் அதாவது ஒரு நிலையில் குவியப்படுத்திருக்கும். இது ஒரு மாபெரும் சக்தியை உள்ளுக்குள் உருவாக்கி மாபெரும் சாதனையாக உருவாக்க உதவியாக இருக்கும். இதனைப் பெரு நிறுவனங்கள் "குவியல்...