பேராசை ....பெருநஷ்டம்
"போதும் என்ற மனமே....." என்ற கடந்த கட்டுரையில் மணல் அள்ளுவதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இலங்கையில் எவ்வாறு மணல் எடுக்கிறார்கள் என்பதனையும் குறிப்பிட்டிருந்தேன். ஆற்றில் தினசரி மணல் எடுக்க அனுமதிப்பதில்லை. வாரம் மூன்று அல்லது நான்கு முறை எடுக்கலாம். அதுவும் ஆறுகளை அரசு சோதனை செய்து மணல் மேடுகளைக் கண்டறிந்து அதன் எல்லைகளை வரையறுத்து மணல் கையால் எடுப்பதை அனுமதிக்கின்றார்கள். இயந்திரம் கொண்டு தோண்டுவது என்பது புறக்கணிக்கப்பட்ட ஒன்று. பொருளாதார வளர்ச்சி என்பது தனி மனிதனுக்கும் நாட்டிற்கும் தேவை. ஆனால் வளர்ச்சி என்பது எல்லையற்று இருக்க வேண்டுமா? என்ற கேள்வி இங்கே தொக்கிக் கொண்டிருக்கிறது பதில் தெரிந்தும் தெரியாத வகையில். எல்லையற்ற வளர்ச்சி என்பது மனிதக் குலத்தையும், உலக உயிர்களையும் , சுற்றுப்புறச் சூழலையும் முற்றிலும் அழித்துவிடும். வளர்ச்சி மற்றும் பயன்கள் ( Cost Vs Benefits) பற்றி ஆராய்ந்து, வளர்ச்சி என்பது உலக சுற்றுச் சூழலைப் பாதிக்கும் என்ற கட்டத்தில் அதன் வளர்ச்சி என்பதை மட்டுப்படுத்தத் தெரிய வேண்டும். தனிமனித வளர்ச்சி என்பதும் அவனது உடல்நிலை , மன அமைதியை...