எல்லைச்சாமி
அமரன் படம் பார்த்து ராணுவ வீரர்களின் தியாகத்தையும் பாராட்டி செய்திகள் வந்து விட்டன. சிலர் சுயசரிதை கதைகளைப் படமாக எடுக்கும்போது உண்மையான கதாபாத்திரங்களை அவர்களது தன்மையுடன் சாதீய மத அடையாளங்களுடன் காட்டவேண்டும் என்று செய்திகளை வெளியிட்டார்கள். இதோ நமது பார்வை இந்த கட்டுரையில். உணர்வு தியாகம் என்பது குடும்பத்துடன் செயல்படுவது தான் ராணுவ வீரரின் அழகு. அதுவும் இந்த படத்தின் நிஜ கதாநாயகனின் வாழ்க்கையிலும் நடைபெற்றுள்ளது. கிராமங்களில் நான்கு திசை எல்லைகளில் சிறு தெய்வங்கள் காவல் தெய்வங்களாக நிற்பார்கள். அந்த கிராமங்கள் காப்பாற்றப்படுவது அந்த எல்லை தெய்வங்கள் என்பது ஊர் நம்பிக்கை. ஊரை விட்டுச் செல்லும் போது அந்த எல்லை தெய்வங்களைக் கைகூப்பி வணங்கி விடைபெற்றுச் செல்வார்கள். வெளியூர் சென்றாலும் கூடவே இருந்து காப்பாற்றுவது இந்த எல்லைச்சாமிகள் என்ற நம்பிக்கை. அதாவது மனிதன் இல்லாத காலி வீடுகளைக் காப்பாற்றுவதும் அந்த எல்லை தெய்வங்கள் என்பதும் மிகப்பெரும் நம்பிக்கை. ஒவ்வொரு எல்லை தெய்வங்களும் ஒவ்வொரு சமுதாய மக்களால் இன்றளவும் பராமரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்