இடுகைகள்

ஆகஸ்ட், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அண்ணல் இராமானுஜர் கண்ட புரட்சி -9

படம்
  தொண்டர் குலத்தில் தொண்டு செய்வதை இயற்கையாகக் கொண்ட பூணூல் அணியாத வைணவர்கள் செய்த தொண்டின் ஏற்றத்தைப் போற்றி, சாதி வித்தியாசம் இல்லாமல் போற்றத்தக்க  ஶ்ரீ  வைஷ்ணவ ஆசாரிய வரிசையில் சேர்த்து  அவர்களைப்  பெருமைப்      படுத்தியது மட்டுமல்லாமல், பிற்காலத்தில் அனைத்து  ஶ்ரீ  வைஷ்ணவர்களும் கொண்டாடும்படி ஏற்பாடு செய்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  திருகச்சி  தம்பிகள் உற்சவம், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் உற்சவங்கள் என்பது மிகவும் பிரபலமாக இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது, என்பதன் மூலம் வைணவ பரம்பரையில் சாதிகள் ஒரு தடை இல்லை . ஆனால் சரணாகதி தத்துவத்தை ஏற்றுக்கொண்டு திருமாலின் அடியார்களாக வாழ்வது என்ற கொள்கை ஒன்றுதான் அவர்கள் எல்லோரையும் ஒரு குடையின் கீழ் இணைக்கிறது என்பதுதான் உண்மை. "யாக  அனுயாக  உத்தர வீதிகளில்  காய அன்ன ஸ்தல சுத்தி பண்ணின வ்ருத்தாசாரம் " யாகத்தில்  காய  சுத்தி பண்ணின  வ்ருத்தாசாரம்  என்ற  ஆசார்ய ஹ்ருதயம்   வாக்கியம், பிள்ளை  உறங்காவில்லி   தாஸர்   என்ற  பாகவதோத்தமர்   தேஹத்தைத்   தொடுவதன் மூலம்  ஶ்ரீ  ராமானுஜர் அவர்களுக்கு  தேஹசுத்தி   ஏற்பட்ட  வைபவத்தைப்