அக்னி பிரவேசம் - பாகவத அபசாரம் பரிகாரம்
ஜீவாத்மா அதன் கர்மாவிற்கேற்ப பலமுறை உடல் என்ற சிறையில் வந்து தங்கி, அதன் கர்ம பலன்களைக் கழிக்கிறது என்பது சனாதன தர்மத்தின் அடிநாதமாக இருக்கும் கொள்கை. ஜீவாத்மா, தான் எண்ணக்கூடிய அல்லது செய்யக்கூடிய செயல்களை ஒரு வடிவத்தில் கொண்டு வருவதற்கு உடல் என்ற கருவி தேவைப்படுகிறது. ஆத்மாவுக்கு உடல் என்பது மிகவும் முக்கியம். உடல் மூலமாகவே செயல்கள் , எண்ணங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இது நாம் கண்ணால் பார்த்து அறியக்கூடிய வகையில் உள்ளது. ஆத்மாவுக்கு ஞானத்துவம், கர்த்தத்துவம், ஆனந்தத்துவம் அனைத்தும் உண்டு. ஆனால் உடல் மூலமாகவே அதைச் செய்து அனுபவிக்க முடியும். ஆத்மா தனியாக இயங்கமுடியுமா என்றால் முடியாது. அது இயங்குவதற்கு ஒரு சூஷ்ம (சிறிய) உடலாவது தேவைப்படுகிறது. தத்துவங்கள் மூன்று என்பது இராமானுஜர் ஏற்படுத்திய விசிஷ்டாத்வைதம் கொள்கை , அடிப்படையில் அசித், சித்,ஈஸ்வர என்ற மூன்று தத்துவங்கள். சைவ சித்தாந்த அடிப்படையிலும் தத்துவங்கள் மூன்று பசு, பதி, பாசம். ஆழ்வார்கள் நாயன்மார்கள் ஏற்படுத்திய சமய தத்துவங்கள் மூன்று என்று கொள்ளலாம். இதில் எந்த வேற்றுமையும் இல்லை. பிரம்மத்தில் வேறுபாடு உண்டு. வைணவர்கள் ஶ்ரீமந