பூர்ணம் - 11
தனக்கு உரித்தானக் கடமையைச் செய்வதில் தயங்கி , குழம்பிக் கொண்டிருக்கும் அர்ஜூனனுக்குக் கடமையை நிறைவேற்றும் படி உற்சாகப் படுத்தும் சொற்கள் கிருஷ்ணனின் கீதை என்ற அமுத மொழிகள். பல உபநிஷத்துகளைக் காமதேனு பசுவாக நிறுத்தி கீதை என்னும் பாலைக் கறந்து அர்ஜூனன் என்ற கன்று மூலம் ஜீவாத்மாக்களுக்கு வழங்குகிறான் பால் கறக்கும் இடையனாகக் கிருஷ்ணன். கடமையைச் செய்யும் போது பலனை எதிர்பார்க்காமல் இச்சையற்றுச் செய்யவும் என்று கீதையில் உரைக்கிறான் கிருஷ்ணன். இதில் சிலருக்குச் சந்தேகம் என்பது, இச்சையில்லாமல் எதிர்பார்ப்பு இல்லாமல் ஏதாவது ஒரு செயலைச் செய்யமுடியுமா? அல்லது அதற்கு மனம்தான் சம்மதிக்குமா? . இந்த மனோநிலை என்பது முக்காலத்திலும் உலகம் முழுவதும் பொதுவாக இருக்கக்கூடிய சூழ்நிலை. இங்குதான் மனம் புத்தி என்பது மனிதனுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது. இந்த ஆசை, எதிர்பார்ப்பு என்பது உலகில் நிலவும் நல்லவற்றுக்கும் கெடுதலுக்கும் உந்து சக்தியாக இருக்கின்றன. இச்சை அல்லது ஆசை என்பது அளவுக்கு மீறிச் செல்லும்போது தனிமனிதச் சரிவுக்கும், தனிமனித அழிவுக்கும், சமுதாய அழிவுக்கும், ஏன் ...